இலங்கையில் பாடகர் ஹரிஹரன் நடத்திய இசை நிகழ்ச்சி... ரம்பா, தமன்னாவை காண வந்து கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்

Published : Feb 10, 2024, 01:56 PM ISTUpdated : Feb 10, 2024, 02:10 PM IST
இலங்கையில் பாடகர் ஹரிஹரன் நடத்திய இசை நிகழ்ச்சி... ரம்பா, தமன்னாவை காண வந்து கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்

சுருக்கம்

இலங்கையில் பாடகர் ஹரிஹரன் நடத்திய இசை நிகழ்ச்சியில் அதிகளவிலான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் காயமடைந்து உள்ளனர்.

இசையமைப்பாளர்கள் இசை நிகழ்ச்சி நிகழ்ச்சி நடத்துவது சமீபகாலமாக டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களாக இருக்கும் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத், யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், இளையராஜா, வித்தியாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் என ஏராளமானோர் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தங்களது இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்த இசை நிகழ்ச்சிகளில் சில குளறுபடிகளும் நடப்பதுண்டு. கடந்த ஆண்டு சென்னையில் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி அதற்கு உதாரணம். அந்த இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அளவுக்கு அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பலர் அதில் சிக்கி கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதில் சில பெண்களுக்கு பாலியல் சீண்டல் நடந்ததாகவும் கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்... வலிமை முதல் லியோ வரை; எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என சாய் பல்லவி ரிஜெக்ட் பண்ணிய படங்கள் இத்தனையா

இந்த இசை நிகழ்ச்சி கடும் சர்ச்சையான நிலையில், இதற்கு மன்னிப்பு கேட்ட ஏ.ஆர்.ரகுமான், இதில் டிக்கெட் வாங்கி கலந்துகொள்ள முடியாமல் போனவர்களுக்கு டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி கொடுத்தார். தற்போது இப்படி ஒரு சம்பவம் தான் இலங்கையில் நடந்துள்ளது. பிரபல பின்னணி பாடகரான ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் நடைபெற்றது. 

இதில் நடிகைகள் ரம்பா, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, நடிகர்கள் மிர்ச்சி சிவா, யோகிபாபு, சாண்டி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியை தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கினார். இந்த இசை நிகழ்ச்சியை காண அதிகளவிலான கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகப்படியான டிக்கெட்டுகள் விற்பனை செய்ததாலேயே இந்த குளறுபடி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த குளறுபடிகள் குறித்து உரிய விசாரணை நடத்தவும் இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டாரின் லால் சலாம் உடன் ஒத்தைக்கு ஒத்தையாக மோதிய மணிகண்டனின் லவ்வர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மாஸ் ஸ்கெட்ச்! இனி தோல்வியே இல்லை! சூர்யாவுக்கு ஹாட்ரிக் ஹிட்டு உறுதி: அதிரடித் திட்டம் என்ன?
சன் டிவி vs விஜய் டிவி : டிஆர்பி வேட்டையில் யார் டாப்பு? இந்த வார டாப் 10 சீரியல் பட்டியலில் அதிரடி மாற்றம்