திடீர் மூச்சுத் திணறலால் மரணமடைந்த அஞ்சாதே பட நடிகர்... சோகத்தில் திரையுலகம்

By Ganesh A  |  First Published Feb 10, 2024, 12:53 PM IST

அஞ்சாதே படத்தில் துணை நடிகராக நடித்த ஸ்ரீதர் என்பவர் மூச்சு திணறல் காரணமாக மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அஞ்சாதே. நரேன் நாயகனாகவும், பிரசாந்த் வில்லனாகவும் நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இயக்குனர் மிஷ்கினின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமும் இதுதான். இப்படத்தில் கால் ஊனமுற்றவராக நடித்தவர் தான் ஸ்ரீதர்.

சின்ன கதாபாத்திரம் என்றாலும் அவரின் கேரக்டருக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. அதற்கு காரணம் ஒரு காட்சியில், தன் கண் முன்னே மகனை போலீசார் சுட்டுக் கொல்லும் போது அவரது நடிப்பு அனைவரையும் அசர வைத்தது. அவரின் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தது. இதுதவிர ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்திலும் ஸ்ரீதர் நடித்திருந்தார்.

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்... விஜய் பட இயக்குனர்கள் உடன் அடுத்தடுத்து கூட்டணி... கோலிவுட்டின் அடுத்த தளபதி ஆகப்போகிறாரா சிவகார்த்திகேயன்?

கடந்த ஒரு வாரமாக இருமலால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீதர், இன்று அதிகலை 1.30 மணி அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். ஸ்ரீதரின் மறைவு தமிழ் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை படங்களில் நடித்து வந்த ஸ்ரீதர் புதிதாக திரைப்படம் ஒன்றை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாக கூறப்படுகிறது. இயக்குனராகும் கனவுடன் இருந்த அவர் திடீரென மறைந்துள்ளது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... நோ பாலிடிக்ஸ்... ஒன்லி சினிமா; ஏர்போர்டில் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டை அள்ளிவிட்ட ரஜினிகாந்த்..!

click me!