பிரதமர் மோடியின் கட்டளையே சாசனம்... மாஸ்க் அணிந்து மோதும் பிரபாஸ் - ராணா... வைரலாகும் “பாகுபலி” வீடியோ...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 26, 2020, 8:42 PM IST
Highlights

இந்நிலையில் மாஸ்க் அணிவதன் கட்டாயம் குறித்து விளக்கும் விதமாக இயக்குநர் எ எஸ்.எஸ். ராஜமவுலி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. கொரோனாவுக்கு இதுவரை இந்தியாவில்  4,97,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2,89,326 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,401 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் தனிமனித இடைவெளி, , சோப்பு போட்டு கைகளை தவறாமல் கழுவுதல், முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. 

 

இதையும் படிங்க: பிரவசத்திற்கு பின் ராதிகா மகளிடம் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... கடைசி போட்டோவை பார்த்தால் நீங்களே அசந்துபோவீங்க!

இன்று உத்தர பிரதேசத்தில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் அம்மாநிலத்தின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்களுடன் உரையாற்றினார். அப்போது கூட, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத வரை, தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரே வழி, தனிப்பட்ட சுகாதாரத்தை நன்கு பேணுதல், சோப்பு போட்டு கைகளை தவறாமல் கழுவுதல், வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசத்தால் வாயை மூடுவது, மற்றும் மிகவும் முக்கியமானது ஆறு அடி தூரம் சமுக இடைவெளியை கடைபிடிப்பது என்று அறிவுறுத்தினார்.

 

இதையும் படிங்க:  ஆசன வாயில் லத்தியை சொருகி... சாத்தான்குளம் கொடூரத்திற்கு எதிராக கொந்தளித்த திரைப்பிரபலங்கள்...!

இந்நிலையில் மாஸ்க் அணிவதன் கட்டாயம் குறித்து விளக்கும் விதமாக இயக்குநர் எ எஸ்.எஸ். ராஜமவுலி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. பாகுபலி இரண்டாம் பாகத்தில் கிளைமாக்ஸில் பிரபாஸ் மற்றும் ராணா மோதிக்கொள்ளும் காட்சியில் இருவரும் மாஸ்க் அணிந்து இருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது அந்த வீடியோ. அத்துடன் மகிழ்மதியிலும் மாஸ்க் அணிவது கட்டாயம். நீங்களும் மறந்து விடாதீர்கள் என கூறி உள்ளனர். ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராஜமெளலி பகிர்ந்துள்ள அந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது. 

Good job and VFX Studio team!

I hope everyone stays safe and exercise caution in these times. pic.twitter.com/kmhOyK3012

— rajamouli ss (@ssrajamouli)
click me!