
கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு இதுவரை நீண்டு கொண்டே செல்கிறது. இடையில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டே செல்வதால் எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பல இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.
குறிப்பாக திரை துறையை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். வசதி படைத்தவர்களை தவிர்த்து, அன்றாடம் பிழைப்பை நம்பி நடித்து வரும் துணை நடிகர்கள், மற்றும் நடுத்தர வசதி படைத்த நடிகர்கள் அன்றாட செலவிற்கு கூட அல்லாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற பிரபல நடிகர் ஒருவர், கருவாடு விற்கும் தொழில் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டி நடிகரான ரோகன் பெட்நோக்கர் மராட்டி மொழியில் சூப்பர் ஹிட்டான பல படங்களில் நடித்து பிரபலமானவர். நடுத்தர வசதிபடைத்த இவர், திடீர் என ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு, திரைப்பட பணிகள் நிறுத்தப்பட்டதால் வறுமைக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தை எப்படியாவது காற்றை வேண்டும் என, தன்னுடைய அப்பா செய்து வரும் கருவாடு வியாபாரத்தை கவனிக்க துவங்கியுள்ளார். பட பிடிப்புகள் துவங்கும் வரை, இந்த பணியை தான் தொடர்ந்து செய்ய உள்ளதாகவும் குடும்ப தொழிலை தானும் செய்வதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.