
தங்களுக்கென ஒரு சூப்பர் பவர் இருந்தால் எப்படி இருக்கும்என்னும் எண்ணம் பலருக்கும் உண்டு. அவ்வாறு பலரின் ஆசையை கற்பனையாக உருவாக்கி உருவெடுத்துள்ள சூப்பர் ஹீரோக்களின் படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தே வருகிறது.
அந்த வகையில் சிலந்தி மேன் என்னும் ஸ்பைடர் மேன் கற்பனைக்கு மிஞ்சிய காட்சியாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், திடீரென சோனி- மார்வெல் நிறுவனங்களுக்கிடையே காப்புரிமை தொடர்பான பிரச்சினை வந்து இரண்டு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்போது 'ஸ்பைடர்மேன்' பட வரிசையில் அடுத்த பாகத்தை இரண்டு தரப்பும் சேர்ந்தே தயாரிக்கின்றன
கடந்த ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் முக்கியப் பாத்திரங்களாக நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட அனைவருமே இந்தப் படத்திலும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கான தலைப்பில் பல குழப்பங்கள் ஏற்பட்டதை அடுத்து ஒரு வழியாக ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் என்னும் பெயரை படக்குழு அறிவித்தது. 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படம் வரும் டிசம்பர் 17 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திலிருந்து தற்போது வெளியாகியுள்ள தமிழ் ட்ரெய்லரில் அதிரடி காட்சிகள் நிறைந்துள்ளது. வேற்று உலகத்திலிருந்து பூமிக்கு வந்து அழிவை ஏற்படுத்தும் சூப்பர் ஹீரோக்களை திரும்ப அனுப்பும் முயற்சியில் ஸ்பைடர் மேன் ஈடுபடும் அதிரடி கட்சிகளுடன் SPIDER-MAN: NO WAY HOME தமிழ் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.