Bharathi Mani: பிரபல நடிகர் பாரதி மணி காலமானார்..!

By manimegalai aFirst Published Nov 17, 2021, 11:10 AM IST
Highlights

பிரபல எழுத்தாளரும், நடிகருமான பாரதிமணி உடல்நலக் குறைவு காரணமாகவும், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 84.

நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தில் பிறந்தவர் பாரதி மணி. தன்னுடைய சிறு வயதிலேயே மேடை நாடகங்களால் ஈர்க்கப்பட்ட இவர், மேடை நாடகங்களில் நடித்த அனுபவங்களை கொண்டே திரைத்துறைக்கு வந்து நடிகராக மாறினார். நடிப்பு மட்டுமின்றி எழுத்தாளராகவும் இருந்துள்ளார்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாபா', விக்ரமின் 'அந்நியன்', பாரதியாரின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான,'பாரதி' போன்ற படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சமீப காலமாக உடல்நலக் குறைவு காரணமாகவும், வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் 84 வயதாகும் இவர் மரணமடைந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழில் 'புள்ளி கோடுகள்', 'கோலங்கள்' என சில புத்தகங்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு திரையுலகினர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: #PoojaHegde"சாக்லேட்டுக்குள் மறைத்து வைத்த கேரமெல் பிஸ்கட் நான்”.. தன்னைத்தானே வர்ணிக்கும் விஜய் பட நாயகி.

மேலும் செய்திகள்: ஏன் ஜெய்பீமை எதிர்கிறீர்கள்..? இது புனிதமான படம்... இயக்குநர் ஞானவேல் வருத்தம்..!

மேலும் செய்திகள்: #Santhanam தனது ஜாதிக்கு வரிந்து கட்டும் சந்தானம்.....!. படத்தில் உயர்வு தாழ்வு கூடாது என எச்சரிக்கை..

மேலும் செய்திகள்: உடல் எடையை குறைத்து... செம்ம ஃபிட்டாக 20 வயசு ஹீரோயின் போல் மாறிய சோனியா அகர்வால்!!

 

 

 

 

click me!