ஏன் ஜெய்பீமை எதிர்கிறீர்கள்..? இது புனிதமான படம்... இயக்குநர் ஞானவேல் வருத்தம்..!

By Thiraviaraj RMFirst Published Nov 17, 2021, 11:04 AM IST
Highlights

மற்ற இடத்தை விட இங்கு குரல்கள் ஓங்கி கேட்கிறது என்பதால் எதிர்ப்புகள் வருகின்றன.

ஜெய் பீம் திரைப்படம் அரசியலாக்கப்படுவது துரதிஷ்டவசமானது என திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

 பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் ‘தேள்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பாடியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குநர் ஹரிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய த.செ.ஞானவேல்ராஜா, சில திரைப்படங்கள் திட்டமிட்டு எடுக்கப்படுவது போன்று ஜெய் பீம் திரைப்படம் எடுக்கப்படவில்லை. ஜெய் பீம் திரைப்படம் புனிதமான நோக்கத்தில் எடுக்கப்பட்டது. தற்போது அந்த படம் அரசியலாக்கப்படுவது ஒரு துரதிஷ்டவசமானது. இது தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியா முழுவதும் நடைபெறும் ஒரு விஷயம். இதனை அரசியல் ரீதியாக அணுகக் கூடாது. பழங்குடியின மக்கள் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற வேண்டும். இது போதுமானதாக இல்லை. இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டியது இருக்கிறது.

தமி நாட்டில் தான் இதற்கு எதிர்ப்பு இருக்கிறது. வட இந்தியர்கள் எதற்கு இந்த மாதிரியான படங்கள் தமிழில் வருகிறது எனக் கேட்பார்கள். மற்ற இடத்தை விட இங்கு குரல்கள் ஓங்கி கேட்கிறது என்பதால் எதிர்ப்புகள் வருகின்றன. திராவிடத்தால் மற்ற மாநிலங்களை விட தமிழகம் சமூகநீதியில் முன்னிலையில் உள்ளது’’  என்று அவர் கூறினார்.

click me!