Jai Bhim | திரௌபதி, ருத்ரதாண்டவம் படம் வரும் போது கோமாவில் இருந்திங்களா.! சந்தானத்தை தெறிக்கவிடும் மீம்ஸ்

By Kanmani P  |  First Published Nov 17, 2021, 11:20 AM IST

ஜெய்பீம் குறித்து நேற்று சந்தானம் கூறிய கருத்து இன்று மீம்ஸுகளாக மாறி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி  வருகிறது.


'ஜெய்பீம்’ படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்துவிட்டது. கடலூரில் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் வந்த ஒரு சில காட்சிகளை வைத்து சிலர் அரசியல் செய்து வருகின்றனர். இந்த படத்தில் கொடூர வில்லனாக வரும் துணை ஆய்வாளர் குருமூர்த்தியின் கதாபாத்திரமும் அவருடைய வீட்டில் இருக்கும் அக்னி கலச காலாண்டரும் சர்ச்சைக்கு வித்திட்டுவிட்டது.

வர வீட்டில் வைக்கப்பட்ட காலண்டரில் அக்கினி கலசம் இடம்பெற்றிருந்ததை உற்று நோக்கிய முக்கிய பிரபலங்களை அந்த புகைப்படத்தை வைத்து மிகப்பெரிய சமூக போரை ஏற்படுத்தி வருகின்றனர். இது சூர்யாவை உதைப்பவருக்கு இ லட்சம் ரொக்க பரிசு என்னும் அளவுக்கும் விஸ்பரூப வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

இது ஒரு புறம் இருக்க சூரியவனுக்கு திமுக போன்ற திராவிட கட்சிகளும், சமூக ஆர்வலர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். 

இதற்கிடையில் நேற்று நடைபெற்ற சபாபதி படத்திற்கான ப்ரோமோஷன் விழாவில் பேசிய சந்தானம் ;   திரைப்படங்களில் ஒருவரது உயர்த்தி கட்டுவதற்காக மற்றவர்களை தாழ்த்தி காட்டுவது முறையல்ல என தெரிவித்ததோ,டு  பட விளம்பர வேலைகளில் இருந்தால் ஜெய் பீம் பற்றி தனக்கு தெரியாது என கூறியிருந்தார்..  இவ்வாறு சந்தானம் தெரிவித்திருப்பது வன்னியர் சமூகத்தை சேர்ந்த சந்தானம் தனது ஜாதிக்கு வரிந்து கட்டுவதாகவே பார்க்கப்படுகிறது. இதை அடுத்து கொந்தளித்த சூர்யா ஆதரவாளர்கள் ஜாதி வெறியன் -சந்தானம் என்னும் ஹேஷ் டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். அநடிக வகையில் தற்போது ட்ரெண்டாகி வரும் மீம்ஸ் ஓன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திரௌபதி,  ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள மோகன் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது. அந்த படங்களிலும் மாற்று சமூக அராஜகத்தை சுட்டி காட்டுவது போன்ற காட்சியமைப்பு இடம் பெற்றிருக்கும். இவ்வாறு சந்தானத்தின் சமூகத்தை சேர்ந்தவர்கள் படம் எடுத்தால் அது சரி, மற்ற சமூகத்தவர் என்றால் எதிர் குரல் கொடுப்பீர்களோ? என கேட்குமாம் விதத்தில் திரௌபதி, ருத்ரதாண்டவம் படம் வரும் போது கோமள இருந்திங்களா  சந்தானம் என்னும் மீம்ஸை தெறிக்க விட்டு வருகின்றனர். மீம்ஸ் கிரியேட்டர்கள். 

click me!