gayathri raguram | 'ரஜினியை விமர்சிப்பவர்கள் திமுக கைக்கூலிகள் ' ; காயத்திரி ரகுராம் காட்டம் !!!

By Kanmani PFirst Published Nov 20, 2021, 11:39 AM IST
Highlights

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான ரஜினியின் கருத்தை விமர்சனம் செய்யாமல் திமுக மது ஆலைகள் குறித்து பேசுங்கள் என காயத்ரி ரகுராம். ட்வீட் பதிவு செய்துள்ளார்.

நடிகையும், நாடன் இயக்குனருமான காயத்ரி ரகுராம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நன்கு ஆறு அறியப்பட்டவராக பார்க்கப்படுகிறீர். இதன் பிறகு அரசியல் பக்கம் திரும்பிய காயத்ரி பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். யாரையும் விமரிசிக்க தயங்காத காயத்ரி  ட்வீட்டரில் வரும் சூடான செய்திகளுக்கு சர்ச்சைக்குரிய  பதிலை சொல்லி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருவார்.

அவ்வாறு தற்போது மேலும் திமுக குறித்து காயத்ரி ரஜினியை விமர்சித்தவருக்கு கொடுத்த பதிலடி தற்போது வைரலாகி வருகிறது. 

ஓராண்டுக்கு மேலாக 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வந்தனர். பல கட்ட பேச்சு வார்த்தையிலும் மனமாறாத விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்ட களத்திலிருந்து நகர மாட்டோம் என்றனர். இதாய் தொடர்ந்து நேற்றைய தினம் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதால் மத்திய அரசு அறிவித்தது. இது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் வேளாண் சட்டம் குறித்து  சமூகஆர்வலர் ஒருவர் தூத்துக்குடி சம்பவம் குறித்த ரஜினியின் கருத்தை  குறிப்பிட்டு செய்த பதிவும், அதற்கு காயத்ரி  திமுக கைக்கூலி என குறிப்பிட்டு கொடுத்துள்ள பதிலடியும் தான் இப்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போது போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மாணவி உள்பட 13 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை தூத்துக்குடிக்கே சென்று பார்வையிட்ட ரஜினிகாந்த் பலியானோரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது செய்தியாளர்ளை சந்தித்த அவர், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது சமூகவிரோதிகள் உள்ளே புகுந்து விட்டனர் என்று கூறியதோடு எதற்கெடுத்தாலும் போராடினால் நாடே சுடுகாடு ஆகிவிடும் என ஆவேசமாக ரஜினி கூறியிருந்தார்.

இதை தற்போது சுட்டிக்காட்டியுள்ள சமுகில ஆர்வலர் ஜி சுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில்; போராடினால் என்ன கிடைக்கும், போராடினால் நாடே சுடுகாடு ஆகிவிடும் என்று சொன்ன அறிவுஜிவிகளே, இதோ ஓராண்டாக விவசாயிகள் போராடியதன் விளைவாக இந்திய பிரதமர் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். வேறு என்ன வேண்டும், போராடினால் வாழ்க்கை கிடைக்கும் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

 

சூப்பர் ஸ்டாரை மறைமுகமாக விமர்சிக்கும் இந்த போராளிகள் திமுகவினர் நடத்தும் மது ஆலைகளால் சுற்றுப்புற சூழலும் நிலத்தடி நீரும் மாசுபடுவதை பற்றி பேசாமல் இருப்பது ஏன் மீத்தேனுக்கு யார் கையெழுத்து போட்டது என்பதை விவாதிக்காதது ஏன் நீங்கள் யாருடைய கைகூலிகளாக https://t.co/smLwE86Fvf

 

இந்த ட்வீட்டருக்கு பதிலளித்துள்ள காயத்ரி ரகுராம் ; சூப்பர் ஸ்டாரை மறைமுகமாக விமர்சிக்கும் இந்த போராளிகள் திமுகவினர் நடத்தும் மது ஆலைகளால் சுற்றுப்புற சூழலும் நிலத்தடி நீரும் மாசுபடுவதை பற்றி பேசாமல் இருப்பது ஏன் மீத்தேனுக்கு யார் கையெழுத்து போட்டது என்பதை விவாதிக்காதது ஏன் நீங்கள் யாருடைய கைகூலிகளாக செயல்படுகிறிர்கள் என்று உலகிற்கு தெரியும் தேவை இல்லாமல் சூப்பர் ஸ்டாரை சீண்டாதீர்கள் என கட்டமாகதெரிவித்துள்ளார்.

click me!