வரேன்...திரும்பி வரேன்... 'மாநாடு' படத்தின் ப்ரீ ரிலீஸ் ட்ரைலர் வெளியானது!!

Published : Nov 19, 2021, 08:00 PM IST
வரேன்...திரும்பி வரேன்... 'மாநாடு' படத்தின் ப்ரீ ரிலீஸ் ட்ரைலர் வெளியானது!!

சுருக்கம்

நடிகர் சிம்பு நடிப்பில் இந்த மாதம் (நவம்பர்) 25 ஆம் தேதி வெளியாக உள்ள 'மாநாடு' ப்ரீ ரிலீஸ் ட்ரைலர் (Manadu pre release trailer) தற்போது வெளியாகியுள்ளது.  

நடிகர் சிம்பு நடிப்பில் இந்த மாதம் (நவம்பர்) 25 ஆம் தேதி வெளியாக உள்ள 'மாநாடு' ப்ரீ ரிலீஸ் ட்ரைலர் (Manadu pre release trailer) தற்போது வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது படக்குழு ப்ரீ ரிலீஸ் ட்ரைலரை வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாநாடு திரைப்படத்தின் இந்த டிரெய்லரும் மிரட்டலாகவே அமைந்திருக்கிறது

.

இந்த படத்தில் முதலமைச்சர் கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்திருக்கிறார். ட்ரைலரில் காட்டப்பட்ட அதே காட்சிகள் இந்த ப்ரீ ரிலீஸ் ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளது. எஸ்.ஏ.சி.யைநெற்றிப் பொட்டில் சுடுகிறார் சிம்பு. இந்த காட்சி திரும்ப, திரும்ப வருவதால் இந்த சம்பவத்தை தவிர்க்க சிம்பு என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார். அதற்காக இவருக்கு எஸ்.ஜெ.சூர்யாவால் என்னனென்ன பிரச்சனைகள் வருவதே படத்தின் கதை என்பது தெரிகிறது.

போலீஸ் காதாப்பாத்திரத்தில் வரும் எஸ்.ஏ.சூர்யா, தனக்கே உரிய பாணியில் வசனங்களை பேசி மிரட்டியிருக்கிறார். ஆக்ஷன் மற்றும் பரபரப்பான காட்சிகளுக்கும் பஞ்சமில்லாத இந்த ப்ரீ ரிலீஸ் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தீபாவளிக்கே இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அண்ணாத்த பட ரிலீஸ் காரணமாக இந்த படம் தள்ளி போனது.

தொடக்க காலங்களில் ஒவ்வொரு படத்திலும் விரல் வித்தை காட்டும் சிம்பு, தற்போது மீண்டும் அந்த வித்தையை நீண்ட நாட்களுக்கு பின் இந்த படத்திலும் காட்டியிருக்கிறார். இந்த படத்தில் நடிகை கல்யாணி பிரிய தர்ஷன் நாயகியாக நடித்துள்ளார். யுவனின் பின்னணி இசை மாஸாக உள்ளது. இன்றைய தினம் இந்த படத்திற்கு யு /ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்ததை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ட்ரைலரையும் வெளியிட்டு சிம்பு ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!