PM Modi withdraws 3 farm laws: இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்த வரலாற்று வெற்றி! நடிகர் கார்த்தி ட்விட்!

By manimegalai aFirst Published Nov 19, 2021, 4:24 PM IST
Highlights

வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்றதற்கு, நடிகர் கார்த்தி (Karthi) ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி என்றும் போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றி என்றும் ட்விட் செய்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்றதற்கு, நடிகர் கார்த்தி ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி என்றும் போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றி என்றும் ட்விட் செய்துள்ளார்.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றிய  போது,  மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். போராட்டம் செய்து வரும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்கு செல்லுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மேலும், விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், எங்களால் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை. விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் என பிரதமர் மோடி அந்த உரையின் போது கூறினார்.

மத்திய அரசு  3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது. இது பெரும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் சிறு குறு விவசாயிகளுக்கு பாதகமாக இருப்பதாகவும் கூறி விவசாயிகள் டெல்லியின் புறகநகர் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்ந்து போாரட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுடன் பல்வேறு சுற்றுப் பேச்சுவாரத்தைகளை மத்திய அரசு நடத்தியும் எந்தத்தீர்வும்  எட்டப்படவில்லை. இதனால், ஆயிரகணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்தை நடைமுறைப்படுத்த தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக 3 வேளாண் சட்டங்களை  திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு கடந்த ஓராண்டு காலமாக போராடி வந்த விவசாயிகள் மனதில் பால் வார்த்தது போல் இருந்தது. இதனை டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினர். மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்தவர்களில் ஒருவர் பிரபல நடிகர் கார்த்தி. தற்போது இந்த வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதாக பிரதமர் அறிவித்ததை தொடர்ந்து, நன்றி தெரிவிக்கும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இதில் அவர் கூறியுள்ளதாவது... "மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய  வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்". என கூறியுள்ளார்.

click me!