vikram: வில்லன்களின் கூடாரமாக மாறும் விக்ரம் படம்.... கமலை அடிக்க இத்தனை பேரா?

By manimegalai aFirst Published Nov 20, 2021, 11:03 AM IST
Highlights

லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

மாநகரம்  படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே முத்திரை பதித்து, தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக உயர்ந்தார். இதையடுத்து கார்த்தியை வைத்து இவர் இயக்கிய கைதி திரைப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. 

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதன்முலம் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த லோகேஷ் கனகராஜ், தற்போது கமல்ஹாசனுடன் கூட்டணி அமைத்துள்ளார். 'விக்ரம்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான, ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிவானி, மகேஷ்வரி, மைனா நந்தினி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதிரடி ஆக்சன் படமாக இது தயாராகி வருவதால், வில்லன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ். அதன்படி இப்படத்தில் 7 வில்லன் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதாம். 

விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் மெயின் வில்லனாக நடித்து வரும் நிலையில், சம்பத்ராம், செம்பன் வினோத், டெல்லி கணேஷின் மகன் மகாதேவன், மைம் புகழ் கோகுல்நாத், மெர்சல் பட வில்லன் ஹாரிஸ் பெராடி ஆகியோர் துணை வில்லன்களாக வந்து மிரட்ட உள்ளார்களாம். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

click me!