விஜய்யின் சைலன்ஸ்-க்குள்ள மிகப்பெரிய வைலன்ஸ் இருக்கு! தளபதி பிறந்தநாள் விழாவில் நடிகர் சவுந்தரராஜா பேச்சு!

Published : Jun 23, 2024, 05:40 PM IST
விஜய்யின் சைலன்ஸ்-க்குள்ள மிகப்பெரிய வைலன்ஸ் இருக்கு! தளபதி பிறந்தநாள் விழாவில் நடிகர் சவுந்தரராஜா பேச்சு!

சுருக்கம்

நடிகர் விஜய் நேற்று (ஜூன் 22) தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில், சென்னையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுகமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சவுந்தரராஜா விஜய்யின் அரசியல் பயணம் பற்றி பேசினார்.   

அப்போது பேசிய அவர், விஜய் அண்ணா நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களா இருந்து, இன்று தொண்டர்களாக மாறி இருக்கீங்க. நீங்க மட்டுமல்ல அடுத்தடுத்து, லாரி லாரி, டிரெயின், டிரெயின், ஃபிளைட் பிளைட்னு 2026-க்கு வந்துட்டே இருக்காங்க. நான் மிகைப்படுத்தி பேசல, இந்த உற்சாகம்தான் பலருக்கு பயத்தை உண்டாக்கும். அந்த உற்சாகம் அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கனும். 

ஒரு விஷயம் நண்பா. நாம சின்ன விஷயம் பண்ணாலும், அதை ஃபோக்கஸ் பண்ண கேமரா இருக்கு. நாம வளரக்கூடாதுனு பண்ணுவாங்க. இந்த வைப்-தான் பலபேரை பயமுறுத்தும், பலபேரை சிந்திக்க வைக்கும். நம்ம அண்ணன் தளபதிக்கு பலமா நிற்கும். 

OTT Release: அரண்மனை 4, PT சார், உட்பட இந்த வாரம் ஓடிடியில் வெளியான 5 தமிழ் படங்கள்! என்னென்ன தெரியுமா?

நம்ம அண்ணன் தளபதி விஜய், இன்னைக்கு ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் ஒருத்தர், சினிமா வேண்டாம்னு, நான் சம்பாதிச்ச பணம், வெற்றி, புகழ், வாழும் வாழ்க்கைக்கு இந்த மக்கள் தான் காரணம். அந்த மக்கள், இந்த மண்ணிற்காக வருகிறார் விஜய். அவர் அரசியலுக்கு வர பேராசை தான் காரணம். அந்த பேராசை, ஒவ்வொருத்தர் குடும்ப ரேஷன் கார்டில் உறுப்பினர் ஆவதுதான் அந்த ஆசை. 

விஜய் அரசியலில் தாக்குப்பிடிப்பாரா, அவருக்கு பேசவே தெரியாதுனு நிறைய பேர் என்கிட்ட சொன்னாங்க. நான் அவங்களுக்கு பதில் கொடுக்கவே இல்லை. இப்போ சொல்றேன், மௌனத்திற்கு இருக்கும் சக்தி மிகவும் பெரியது. விஜய் மிகவும் சைலண்ட் ஆன நபர். அந்த சைலன்ஸ்-க்குள்ள மிகப்பெரிய வைலன்ஸ் இருக்கு. அந்த வைலன்ஸ்-க்கு எதிராக மட்டும் தான் வெளியே வரும். 

'கருடன்' பட வெற்றியால் சூரிக்கு அடித்த ஜாக்பாட்! தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லீ கிஃப்ட் என்ன தெரியுமா?

விஜய் மிகப்பெரிய பேச்சாளர், விரைவில் அதை பார்ப்பீங்க. பேச்சாளர் பக்கம்பக்கமா பேசனும்னு அவசியம் இல்லை. ஒரு வார்த்தை பேசினா போதும். தமிழக அரசியலை படிங்க. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ஏன் ரூ. 10 லட்சம் கொடுக்கணும். நீங்கள் ரசிகரா இல்லாமல் தொண்டரா மாறுங்க. அரசியல் படிச்சு கேள்வி கேட்கணும். நீங்க கேள்வி கேட்டால் தான் பதில் கிடைக்கணும். நாம வாழ்ந்து, நம்மால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு நல்லது செய்வோம். விஜய் அண்ணா வழியில் மக்களுக்கும், மண்ணுக்கும் நல்லது செய்வோம், என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சவுந்தரராஜா, "தளபதி விஜய் அண்ணா, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் 50-வது பிறந்தநாள், பொன்விழாவை விமர்சையாக கொண்டாடி வருகிறோம். சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் மாவட்ட தலைவர் அண்ணன் பாலமுருகன் தலைமையில் அம்பத்தூர், மாதவரம், மதுரவாயல் மற்றும் ஆவடி என நான்கு தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இந்த தொகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் என பலருக்கு கணினி, டி ஷர்ட், ஊனமுற்றோருக்கான மிதிவண்டி மற்றும் அரிசி, சேலை, இஸ்திரி பெட்டி என ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர். இந்த இடத்தில் ஒரு கருவியாக நிற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." 

Vijay & Trisha Outing photo: ஜோடியாக அவுட்டிங் சென்ற விஜய் - திரிஷா! திரையுலகில் புகைச்சலை ஏற்படுத்திய போட்டோ!

"ஸ்டிக்கர் அரசியலை தாண்டி, யார் செய்கிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டிய தேவை இருக்கு. நாம் யார் என்பதை சத்தம் போட்டு கூற வேண்டிய அவசியம் இருக்கு. எல்லாத்துக்கும் விளம்பரம் வேண்டும். அரசியல் சார்ந்த நல்ல விஷயங்கள் மற்றும் கொள்கைகளுக்கு விளம்பரம் அவசியம். மௌனம் மிகப்பெரிய சத்தம். விஜய் எல்லாவற்றையும் அணுஅணுவாக ஆராய்ந்து, தனக்குள் அதிகம் விவாதம் செய்து ஒரு வார்த்தை பேசுவார். அது சரியாக இருக்கும் என்று நேரடியாக பார்த்திருக்கிறேன். அவர் பேச்சாளர் என்பதை விரைவில் பார்ப்பீர்கள்." 

"கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களும் மனிதர்கள் தான். கள்ளச்சாராயத்தை ஒழிப்பதாக ஆட்சிக்கு வரும் எல்லா கட்சிகளும் சொல்கின்றன. ஆனால் மதுவிலக்கை கொண்டுவருவதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை விட்டுவிட முடியாது. நடிகர்கள் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதில் மனிதாபிமானம் மட்டும்தான் உள்ளது."

Devayani: 2 ஹீரோயின்ஸ் ரெடி! அம்மாவை மிஞ்சிய அழகில் தேவயானியின் மகள்கள்! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

"விஜய்யின் மௌனத்தில் ஆயிரம் வார்த்தைகள் அடங்கி இருக்கு. நேரம் வரும் போது சரியாக பேசுவார்கள். ஒரு தம்பியாக அவருடன் பழகிய எனக்கும், அவரது கோடிக்கணக்கான தொண்டர்களுக்கும் நம்பிக்கை இருக்கு. அதை நீங்கள் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்," என்று தெரிவித்தார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?