எளிமையாக நடந்த இயக்குனர் அமீர் மகள் திருமண விழா! வெற்றிமாறன்,  ஆர்யா உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்பு

Published : Jun 23, 2024, 05:34 PM ISTUpdated : Jun 23, 2024, 05:45 PM IST
எளிமையாக நடந்த இயக்குனர் அமீர் மகள் திருமண விழா! வெற்றிமாறன்,  ஆர்யா உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்பு

சுருக்கம்

இயக்குனரும், நடிகருமான அமீர் மகளான அனி நிஷாவின் திருமண விழா மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை  நடைபெற்றது.

மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குனர் அமீர் மகள் திருமண விழாவில் இயக்குநர் வெற்றிமாறன்,  நடிகர் ஆர்யா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்று திருமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மதுரையைச் சேர்ந்த பிரபல இயக்குனரும், நடிகருமான அமீர் மகளான அனி நிஷாவின் திருமண விழா மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை  நடைபெற்றது.

மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் சேரன் , வெற்றிமாறன்,  சசிகுமார் , சமுத்திரக்கனி , சரவணன் , கரு.பழனியப்பன், எஸ் ஆர் பிரபாகரன் , சுப்பிரமணியம் சிவா  மற்றும் நடிகர்கள் ஆர்யா , பொன்வண்ணன் , கஞ்சா கருப்பு, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள்  பங்கேற்றனர்.

நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாகப் பேசிய இனியவனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

திருமண விழாவிற்கு வருகை தந்த திரையுலகத்தினரை இயக்குனர் அமீர் ஆரத் தழுவி வரவேற்றார். எளிமையாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் இயக்குனர் அமீர் மணமகனிடம் தனது மகளை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்ட பின்பாக திருமணம் நடைபெற்றது 

அப்போது மண்டபத்தில் கூடியிருந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் திருமணம் நடைபெற்றதையடுத்து கைதட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். திருமணம் நடைபெற்ற பின்னர் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின் (துஆ) வின் போது மணமக்கள் நீடுழி வாழவேண்டி இயக்குனர் சமுத்திரக்கனி மனமுருக கைகூப்பி வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டார் 

இதனைத் தொடர்ந்து மணமகனோடு சேர்ந்து திரையுலகத்தினர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் எளிமையாக நடைபெற்ற இந்த இந்த திருமண விழாவில் திருமணத்திற்கு வந்தவர்களிடம் இருந்து மணமக்கள் எந்த பரிசு பொருட்களும் மற்றும் மொய்ப்பணம் உள்ளிட்டவைகளை வாங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் தப்பே நடக்கவில்லை என்று உருட்டிய அமைச்சர்... ஒரு வாரத்தில் சிபிஐ விசாரணை!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!
ஸ்வீட் எடு கொண்டாடு: எலிமினேஷனில் இருந்து கிரேட் எஸ்கேப்: பாரு ஹேப்பி அண்ணாச்சி!