
உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'இந்தியன்'. சேனாபதி என்கின்ற சுதந்திர போராட்ட வீரரின் கதாபாத்திரத்தை ஏற்று கமல்ஹாசன் நடித்திருந்தார் என்று சொல்வதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் இப்படத்தில் கமல் நடித்திருந்தார்.
இந்நிலையில் இப்படதின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் இருவரும் இணைய உள்ளதாக கடந்த 2017-ஆம் ஆண்டு அதிகார பூர்வமாக அறிவித்தனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஒருவழியாக 2019-ஆம் ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பமான நிலையில், கமலுக்கு ஏற்பட்ட மேக்கப் அலர்ஜி, கிரேன் விபத்து, கொரானா பிரச்சனை என பல தடைகள் வந்தன. ஒருகட்டத்தில் இப்படத்தை அப்படியே விட்டுவிட்டு இயக்குனர் ஷங்கர் ராம் சரண் படத்தை இயக்க சென்ற நிலையில், லைகா நிறுவனம் நீதிமன்றம் வரை சென்று மீண்டும் இயக்குனர் ஷங்கரை இப்பததை இயக்க வைத்தது.
அதர்வா - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ' படத்தின் முக்கிய பணிகள் துவக்கம்!
ஒருவழியாக சுமார் 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, வருகின்ற ஜூலை மாதம் 12ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. மேலும் இப்படம் மிகவும் பெரிதாக இருப்பதால் மூன்று பாகமாக இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா, பிரபல நடிகை காஜல் அகர்வால், மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ஆடியோ லான்ச், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நிறைவடைந்தது அனைவரும் அறிந்ததே. படம் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்து இப்படத்தின் அப்டேட் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் ட்ரைலர் ஜூன் 27-ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆனால் எத்தனை மணிக்கு வெளியாகும் என்கிற விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.