துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான கருடன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
ஹீரோ சூரி
தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வந்த சூரி தற்போது முழு நேர ஹீரோவாக உருவெடுத்துள்ளார். அவரை முதன்முதலில் ஹீரோவாக்கி அழகுபார்த்தது இயக்குனர் வெற்றிமாறன் தான். அவர் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சூரி. அப்படத்தில் அவரின் நடிப்பை பார்த்து ஒட்டுமொத்த கோலிவுட்டே வியந்தது. விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூரிக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
கருடன் வெற்றி
விடுதலை படத்தின் வெற்றிக்கு பின்னர் சூரி, ஹீரோவாக நடித்த படம் கருடன். இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார். இப்படத்தில் சூரி உடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கருடன் திரைப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டி இருந்த சூரியின் நடிப்பை பார்த்து பலரும் பிரம்மித்துப் போகினர். அப்படம் கடந்த மாதம் 31-ந் தேதி திரைக்கு வந்து அமோக வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரிக்குவித்தது.
இதையும் படியுங்கள்... ஜெயம் ரவி உடன் விவாகரத்தா? தீயாய் பரவிய தகவல்... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த அவரது மனைவி ஆர்த்தி
கருடன் ஓடிடி ரிலீஸ்
கருடன் திரைப்படம் ரிலீஸ் ஆன பத்தே நாட்களில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. தியேட்டரில் சக்கைப்போடு போட்ட கருடன் திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதன்படி அப்படம் வருகிற ஜூலை முதல் வாரத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
சூரி கைவசம் உள்ள படங்கள்
கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடித்த கொட்டுக்காளி திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை கூழாங்கல் படத்தின் இயக்குனர் வினோத்ராஜ் இயக்கி உள்ளார். சிவகார்த்திகேயன் தான் இப்படத்தை தயாரித்து உள்ளார். இதுதவிர விலங்கு வெப் தொடரின் இயக்குனர் பிரசாந்த் இயக்கத்திலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி உள்ளார் சூரி. மேலும் விடுதலை 2 படமும் அவர் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Seeman : சீமான் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த சிவகார்த்திகேயன்... 2 மணிநேர சந்திப்பு; கன்பார்ம் ஆன கூட்டணி