
1997-ம் ஆண்டு வெளியான W/o வி. வர பிரசாத் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இஷா கோபிகர். எனினும் அந்த படத்தில் அவர் பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடியிருப்பார். அவர் ஹீயோயினாக எண்ட்ரி கொடுத்தது 1998-ம் ஆண்டு சந்திரலேகா என்ற தெலுங்கு படத்தில் தான்.
பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை படத்தின் மூலம் இஷா கோபிகா தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தத நிலையில் வணிக ரீதியில் ஹிட் படமாக அமைந்தது. இதை தொடர்ந்து அரவிந்த் சாமிக்கு ஜோடியாக என் சுவாசே காற்றே படத்தில் இஷா நடித்திருந்தார். இந்த படமும் சுமாரான வெற்றியை பெற்றது.
இதை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான நெஞ்சினிலே படத்தில் இஷா கோபிகர் நடித்திருந்தார். இந்த படமும் வணிக ரீதியில் வெற்றி படமாக அமைந்தது. இதை தொடர்ந்து விஜயகாந்துக்கு ஜோடியாக நரசிம்மா படத்தில் நடித்த இஷாவுக்கு ஹிந்தியில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. ஹிந்தியில் தர்னா மனா ஹை, பிஞ்சார், LOC கார்கில், கிருஷ்ணா காட்டேஜ் டான் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் அவர் நடித்தார். தொடர்ந்து பாலிவுட்டில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்த அவர், 23 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் அயலான் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தார்.
இந்த நிலையில் சினிமாவில் ஆரம்ப நாட்களில் தனக்கு நடந்த காஸ்டிங் கவுச் அனுபவங்கள் குறித்து நடிகை இஷா கோபிகர் பேசி உள்ளார். அப்போது பேசிய அவர் “ கதாப்பாத்திரங்களைத் தீர்மானிக்கும் சக்தி பெரும்பாலும் ஹீரோக்கள் மற்றும் நடிகர்களிடம் இருக்கிறது. பல நடிகைகள் அந்த நேரத்தில், அழுத்தம் காரணமாக திரையுலகை விட்டு விலக முடிவு செய்தனர். நான் உட்பட ஒரு சிலரே கைவிடாமல் தொழில்துறையில் தொடர்கிறோம். ஒரு மேனேஜாரும் நடிகரும் என்னை அணுகியபோது எனக்கு 18 வயது. சினிமாவில் வாய்ப்பு கிடைக்க நடிகர்களுடன் ‘நட்பாக’ இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் மிகவும் நட்பாக இருக்கிறேன், ஆனால் ‘நட்பு’ என்றால் என்ன” என்று தெரிவித்தார்.
ரஜினி, மம்முட்டி முதல் துல்கர் வரை.. பிரபல உச்ச நடிகர்களின் அரிய Unseen வெட்டிங் போட்டோஸ் இதோ..
தொடர்ந்து பேசிய இஷா கோபிகர் தனது 23 வயதில் ஒரு அதிர்ச்சிகரமான காஸ்டிங் கவுச் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து பேசிய அவர் “ அப்போது உச்சத்தில் இருந்த ஒரு முன்னணி என்னை தனியாக சந்திக்கும் படி அழைத்தார். என்னுடன் எனது ஓட்டுனரோ அல்லது வேறு யாரும் வரக்கூடாது என்றும் அவர் கூறினார். எனக்கும் சில நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாக ஏற்கனவே வதந்திகள் பரவி வருகின்றன. எனவே யாருமில்லாமல் என்னை தனியாக சந்திக்க வர வேண்டும் என்று கூறினார். ஆனால் அவரை சந்திக்க மறுத்துவிட்டேன்.’ என்று கூறினார்.
நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் மேனாஜர்கள் உடனான சில மோசமான அனுபவங்கள் குறித்து இஷா பேசினார். மேலும் “ மேனேஜர்கள் என்னை தகாத முறையில் தொட்டு, நடிகர்களுடன் மிகவும் 'நட்பாக' இருக்க வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். அவர்களின் செயல்கள் அற்பமானவை. சிலர் என் தோள்பட்டையை தகாத முறையில் அழுத்தி உள்ளனர்” என்று கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.