MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஜெயம் ரவி உடன் விவாகரத்தா? தீயாய் பரவிய தகவல்... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த அவரது மனைவி ஆர்த்தி

ஜெயம் ரவி உடன் விவாகரத்தா? தீயாய் பரவிய தகவல்... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த அவரது மனைவி ஆர்த்தி

நடிகர் ஜெயம் ரவியும் அவரது காதல் மனைவி ஆர்த்தியும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவி வந்தது.

2 Min read
Ganesh A
Published : Jun 21 2024, 08:25 AM IST| Updated : Jun 21 2024, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
D Imman Monicka

D Imman Monicka

கோலிவுட்டில் விவாகரத்து என்பது சமீபகாலமாக அதிகளவில் அரங்கேறி வருகிறது. இசையமைப்பாளர் டி இமான் தன்னுடைய மனைவி மோனிகாவை விவாகரத்து செய்து பிரிந்து, பின்னர் வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணமும் செய்துகொண்டார். அவரது விவாகரத்து முடிவுக்கு நடிகர் சிவகார்த்திகேயனும் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. டி இமானும் சிவகார்த்திகேயன் தனக்கு மன்னிக்க முடியாத துரோகம் செய்துவிட்டதாக பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

25
Dhanush Aishwarya

Dhanush Aishwarya

இமானை தொடர்ந்து நடிகர் தனுஷ் தன்னுடைய விவாகரத்து முடிவை அறிவித்தார். நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷ், அவருடனான 18 ஆண்டு சேர்ந்து வாழ்ந்த பின்னர் தன்னுடைய விவாகரத்து முடிவை அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரையும் சேர்த்து வைக்க இருவீட்டாரும் முயன்று பார்த்தனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது.

இதையும் படியுங்கள்... Seeman : சீமான் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த சிவகார்த்திகேயன்... 2 மணிநேர சந்திப்பு; கன்பார்ம் ஆன கூட்டணி

35
GV Prakash and saindhavi

GV Prakash and saindhavi

இதுதவிர இயக்குனர் பாலாவும் தன்னுடைய மனைவி முத்துமலரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அண்மையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தன்னுடைய காதல் மனைவி சைந்தவியை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார். இப்படி கோலிவுட்டில் விவாகரத்து செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில், நேற்று மற்றுமொரு ஜோடி விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் ஒன்று கசிந்து காட்டுத்தீ போல் பரவியது.

45
Jayam Ravi, Aarti

Jayam Ravi, Aarti

அவர்கள் வேறுயாருமில்லை நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி ஜோடி தான். காதல் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது.

55
aarti ravi insta story

aarti ravi insta story

இந்த விவாகரத்து சர்ச்சை குறித்து ஜெயம் ரவி அமைதி காத்து வந்தாலும், அவரது மனைவி ஆர்த்தி தரமான பதிலடி கொடுத்திருக்கிறார். அதன்படி ஜெயம் படம் ரிலீஸாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை குறிப்பிடும் விதமாக உருவாக்கப்பட்ட போஸ்டர் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘காதல் என்னும் வார்த்தை; அது வார்த்தை அல்ல வாழ்க்கை’ என்று கேப்ஷனும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் தன்னைப்பற்றிய விவாகரத்து சர்ச்சைக்கு தரமான பதிலடி கொடுத்திருக்கிறார் ஆர்த்தி.

இதையும் படியுங்கள்... அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்! நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம்.. ஜிவி பிரகாஷ் ஆவேச பதிவு!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜெயம் ரவி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved