
இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ராமு. இப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு தந்தையாக எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதனால் இவரை சினிமாவில் பூ ராமு என்றே அழைத்தனர். நாடகக் கலைஞரான இவர் முறையான நடிப்பு பயிற்சி பெற்று பின்னர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
இதையும் படியுங்கள்.. varisu : ‘வாரிசு’ படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்படும் விஜய்யின் பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்
சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தில் நடிகர் சூர்யாவுக்கு தந்தையாக நடித்து அசத்தி இருந்தார். இந்நிலையில் நடிகர் பூ ராமுவுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சென்னை இராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்.. Nayanthara : ஹனிமூன் போட்டோஸை வெளியிட்ட விக்னேஷ் சிவன்... அதுல நயன்தாரா எடுத்த போட்டோ வேற லெவல்
இதுகுறித்த தகவலை நடிகர் காளி வெங்கட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரைந்து நலம் பெற்றுவா தோழா! வீதி நாடகக் கலைஞர், திரைப்பட நடிகர், தோழர் 'பூ' ராமு மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் கிரிடிகல் நிலையில் சென்னை இராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் Tower 1 ல் முதல் மாடி ICU Ward 111ல் Bed 15ல் சிகிச்சை பெற்று வருகிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்.. இதுவும் போச்சா... சொந்த படமும் சொதப்பியதால் சோகத்தில் கீர்த்தி சுரேஷ் - இனி உதயநிதி தான் காப்பாத்தனும்!
காளி வெங்கட்டின் பதிவைப் பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர். சிலரோ அவரது மருத்துவச் செலவுக்கு திரைப்பிரபலங்கள் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.