விக்னேஷ் சிவன் படத்தில் ஹீரோவான சூர்யாவின் நண்பர்! ஹீரோயினாக மாறிய பாடகி!

Published : Feb 27, 2021, 06:59 PM IST
விக்னேஷ் சிவன் படத்தில் ஹீரோவான சூர்யாவின் நண்பர்!  ஹீரோயினாக மாறிய பாடகி!

சுருக்கம்

தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார். நடிப்பு மட்டும் இன்றி, சமீப காலமாக தயாரிப்பாளராகவும் உருவெடுத்து... காதலன் விக்கியுடன் இணைத்து 'ரவுடி பிச்சர்ஸ்' மூலம் சில படங்களை தயாரித்து வெற்றி நடை போட்டு வருகிறார்.  

இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் தயாராகி வருகிறது. அதனை தொடர்ந்து ராக்கி மற்றும் கூழாங்கல் ஆகிய திரைப்படங்களின் உரிமையையும் கைப்பற்றி உள்ளது. ரவுடி பிக்ச்சர்ஸ் நிறுவனம்.

மேலும் செய்திகள்: 'கோல்ட்மேனுக்கு' ஜோடியான பிக்பாஸ் வனிதா! பூஜையோடு துவங்கியது படப்பிடிப்பு!
 
அது மட்டுமின்றி விக்னேஷ் சிவன் இயக்கி விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினையும் ரவுடி பிச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறார். 'வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குனர் விநாயக் என்பவர் இயக்க உள்ளார். 

மேலும் செய்திகள்: கவர்ச்சி உடையிலும் கேப்ஷனால் கவர்ந்த ஷிவானி..! ரசிகர்களிடம் கிடைக்கும் வேற லெவல் ரெஸ்பான்ஸ்...!
 
இந்த படத்தில் சூரரை போற்று படத்தில், சூர்யாவிற்கு நண்பராக  பைலட்டாக நடித்த கிருஷ்ணகுமார் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஜொனிடா காந்தி. இவர் தமிழில்  ‘டாக்டர்’ படத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'செல்லம்மா' பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இவ்வளவு நடந்தும் இன்னும் டிராமாவா: நான் மருமகள் தானே மன்னிக்க கூடாதா: கதறிய தங்கமயில்!
அடுத்த 1000 கோடி வசூலுக்கு ரெடியான ஷாருக்கான்... பட்டாசாய் வந்த ‘பதான் 2’ அப்டேட்