கவர்ச்சி உடையிலும் கேப்ஷனால் கவர்ந்த ஷிவானி..! ரசிகர்களிடம் கிடைக்கும் வேற லெவல் ரெஸ்பான்ஸ்...!
செம்ம மாடர்ன் உடையில்... புகைப்படம் வெளியிட்டு இதற்க்கு இவர் கொடுத்துள்ள கேப்ஷன் வேற லெவலுக்கு உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பும், சரியாக 4 மணி ஆகிவிட்டால் கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டு அட்ராசிட்டி செய்து வந்த ஷிவானி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கொஞ்சம் கவர்ச்சி அலைகளை ஓவராக அலைபாயவிடாமல் அடக்கி வாசித்து வந்த இவர் மீண்டும், ரசிகர்கள் ஆசைக்கு இணங்க கவர்ச்சியில் தெறிக்கவிட்டு வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே சென்ற முதல் வாரத்திலேயே, யாரிடமும் சரியாக பேசவில்லை என ஒதுக்கப்பட்டதால், ஒரு சில வாரங்களிலேயே அம்மணி வீட்டுக்கு மூட்டையை கட்டி விடுவார் என எதிர்பார்த்த நிலையில், சைலண்டாக விளையாடி... நாமினேஷனில் இருந்து தப்பித்து பைனல் செல்வதற்கு முந்தய வாரம் எலிமினேட் ஆகி வெளியேறினார் ஷிவானி.
ஓவியா, லாஸ்லியா அளவிற்கு டான்ஸ் ஆடாவிட்டாலும் ஓரளவிற்கு டான்ஸ் ஆடி பிக்பாஸ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார்.
பிக்பாஸ் சீசன் 4 காதல் கிசுகிசுவில் சிக்கிய இவர், ஃபிரீஸ் டாஸ்கிங் போது, அவரது அம்மாவிடம் கண்ட மேனிக்கு திட்டு வாங்கி, குலுங்கி குலுங்கி அழுதார். பின்னர் கமல் அனைவர் முன்பும் அவருடைய அம்மாவை, சமாதானம் செய்த பின்னரே இந்த பிரச்சனை முடிவிற்கு வந்தது.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் ஷிவானி, பாலாஜி உட்பட பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவருடனும் நல்ல விதமான நட்பில் உள்ளார்.
சமீபத்தில் தன்னுடைய நாய் குட்டியின் முதல் பிறந்தநாள் பார்ட்டியில் இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகியது.
இந்நிலையில், செம்ம மாடர்ன் உடையில்... புகைப்படம் வெளியிட்டு இதற்க்கு இவர் கொடுத்துள்ள கேப்ஷன் வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகியுள்ளது. அதில் ... "ஒரு வலிமையான பெண் பாராட்டுக்கள் மற்றும் விமர்சனங்கள் என இரண்டையும் சம அளவில் ஏற்றுக்கொள்கிறார். ஒரு மலர் வளர சூரியன் மற்றும் மழை இரண்டையும் எடுக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள்' என்று ஷிவானி பதிவு செய்துள்ளார்.