ஜக்கி வாசுதேவ் வார்த்தைகளை ஏற்கிறேன்! பக்தர்களுக்கு விட்டுவிடுங்கள்! வருத்தத்தோடு ட்விட் போட்ட சந்தானம்!

By manimegalai aFirst Published Feb 27, 2021, 4:19 PM IST
Highlights

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த 'டீக்கடை பெஞ்ச்' என்கிற காமெடி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பின், 'லொள்ளு சபா', 'சகலை VS ரகளை' போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய காமெடி பேச்சால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகர் சந்தானம்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த 'டீக்கடை பெஞ்ச்' என்கிற காமெடி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பின், 'லொள்ளு சபா', 'சகலை VS ரகளை' போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய காமெடி பேச்சால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகர் சந்தானம். இதைதொடர்ந்த்து, நடிகர் சிம்பு நடிப்பில், 2004 ஆம் ஆண்டு வெளியான 'மன்மதன்' படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். பின் சச்சின்,  சிவா மனசுல சக்தி,  பாஸ் என்கிற பாஸ்கரன்,  சிறுத்தை,  உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னுடைய ஈடுஇணையற்ற காமெடியால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்.

மேலும் செய்திகள்: 20 வருடத்திற்கு பின் மீண்டும் சூர்யாவுடன் இணையும் முக்கிய பிரபலம்!
 

இவரின் காமெடி நடிப்புக்கு,  தற்போது கூட தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காமெடி நடிகர் என்பதையும் தாண்டி, கடந்த சில வருடங்களாக ஹீரோ கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு 2  ' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'பாரிஸ் ஜெயராஜ்', மற்றும் 'டிக்கிலோனா' ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் சந்தானம், ஈஷா ஜகி வாசுதேவ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தை முழுமையாக ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: கவர்ச்சி உடையிலும் கேப்ஷனால் கவர்ந்த ஷிவானி..! ரசிகர்களிடம் கிடைக்கும் வேற லெவல் ரெஸ்பான்ஸ்...!
 

இன்று காலை சற்குரு.. 11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது. என கூறியிருந்தார்.

இதனை ரீ-ட்விட் செய்து, நடிகர் சந்தானம்... சற்குருவின் கருத்திற்கு முழுமையாக உடன்படுவதாகவும் பக்கதர்களிடம் விட்டு விடுங்கள் . ஒரு பூஜை கூட நடக்காமல் பல வழிபாட்டுத் தலங்கள் இருப்பதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. பராமரிப்பு, பாதுகாப்பு போன்றவற்றுக்கு மிகக் குறைவாகவே செய்யப்படுகிறது. என தெரிவித்துள்ளார்.

click me!