Don Movie First Look: சிவப்பு கலர் கோட்டில் மாஸ் காட்டும் 'டான்' சிவகார்த்திகேயன்..! ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.!

Published : Nov 10, 2021, 06:19 PM IST
Don Movie First Look: சிவப்பு கலர் கோட்டில் மாஸ் காட்டும் 'டான்' சிவகார்த்திகேயன்..! ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.!

சுருக்கம்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டான்' படம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.  

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டான்' படம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம், கடந்த மாதம் ரிலீசான நிலையில், ரசிகர்களின் பேராதரவுடன் நல்ல வரவேற்பை பெற்று, இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்தது. மேலும் திரையரங்கில் வெளியான ஒரே மாதத்தில், தீபாவளிக்கு பிரபல தனியார் தொலைக்காட்சியிலும் வெளியாகி டி.ஆர்.பி-யைபி அள்ளியது.

மேலும் செய்திகள்: Suruthi: பிகினி உடையில் படு மோசமாக போஸ் கொடுத்து... அதகளம் பண்ணும் பிக்பாஸ் 5 சுருதி பெரியசாமி!! வைரல் போஸ்!!

 

இதை தொடர்ந்து 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘அயலான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். ஒவ்வொரு படத்தை முடித்ததும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி வரும் சிவகார்த்திகேயன் தற்போது லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனும் ஒன்றாக இணைந்து தயாரித்து வரும் 'டான்' என்ற படத்தில் பிசியாக நடித்து வந்தார். இந்த படத்தைஅட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கி வந்தார்.

மேலும் செய்திகள்: Dance master Jayanth: அதிர்ச்சி.. நடன இயக்குனர் கூல் ஜெயந்த் மரணத்திற்கு இதுதான் காரணமா? சோகத்தில் திரையுலகம்

 

சிவகார்த்திகேயன் தற்போது மும்முரமாக நடித்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.  மேலும் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் டப்பிங் பணியை முடித்து விட்டதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்திருந்தார். 'டாக்டர்' வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில்,  இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்: Keerthy Suresh: சத்தமில்லாமல் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய கீர்த்தி சுரேஷ்... அட ஹீரோ இந்த வில்லன் நடிகரா?

 

இவர்களை தவிர முன்னணி காமெடி நடிகர் சூரி, முனீஸ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், குக் வித் கோமாளி ஷிவாங்கி, புகழ் என பலர் நடிக்கிறார்கள்.  இந்த படத்தில் போட்டோ கிராபர் அல்லது, பத்திரிக்கையாளர் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: Tamannaah Bhatia: ஸ்கின் கலர் உடையில்... நச்சுனு இருக்கும் ஸ்டக்ச்சர்!! டாப் அங்கிள் போஸில் சூடேற்றிய தமன்னா!

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில், சற்று முன்னர் சிவப்பு நிற கோட் அணிந்து செம்ம மாஸாக சிவகார்த்திகேயன் நிற்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் சிவகார்த்திகேயன், பாலசரவணன் உள்ளிட்ட நான்கு பேர் புத்தகம், ஸ்பீக்கர் போன்ற பொருட்களை கையில் வைத்துள்ளனர். இந்த படத்திற்கு டாக்டர் படத்தை தொடர்ந்து அனிரூத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!