இந்தியன் 2விற்கு வந்த புது சிக்கல்.... மகிழ்ச்சியான செய்தி சொல்ல காத்திருக்கும் காஜல் ...

Kanmani P   | Asianet News
Published : Nov 10, 2021, 05:39 PM IST
இந்தியன் 2விற்கு வந்த புது சிக்கல்.... மகிழ்ச்சியான செய்தி சொல்ல காத்திருக்கும் காஜல் ...

சுருக்கம்

இந்தியன் 2 படத்திலிருந்து பிரபல நடிகை விலக முடிவெடுத்திருப்பதாகவும், இதனால் புதிய நாயகியை படக்குழு தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில்  என நட்சத்திர பட்டாளத்துடன் திரை கண்டது.. ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. 1995-ல் வெளியான ரஜினியின் பாட்ஷா பட வசூலை இந்தியன் படம் முறியடித்து சாதனை படைத்தது.

வெள்ளி விழா காணும் இந்தியன் படத்தின் இரண்டாம் பக்கத்தை உருவாக்க இயக்குனர் ஷங்கர்  பெருமுயற்ச்சி எடுத்து வருகிறார். இந்தியன் 2' படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது , இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் . கமல்ஹாசன் தவிர, 'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் , பிரியா பவானி சங்கர் , சித்தார்த் மற்றும் பல பிரபலமான முகங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது. பின்னர் கொரோனா ஊரடங்கு படப்பிடிப்பை பாதித்தது. இதையடுத்து லைகா நிறுவனத்துடனான பிரச்சனையும் அதனால் ஷங்கர் சந்தித்த வழக்குகளும் படப்பிடிப்பை மேலும் தள்ளிப்போட்டது. இந்த பிரச்சனைகள் ஒரு வழியாக தீர்த்து வைக்கப்பட்டு படப்பிடிப்பை மீண்டும் துவங்க ஷங்கர் தயாராகி வரும் நிலையில் மீண்டும் இந்தியன் 2வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் நாயகியாக நடித்து வரும் காஜல் அகர்வால் திடீரென படப்பிடிப்பிலிருந்து விலக  முடிவெடுத்ததால் அவருக்கு மரராக வேறொரு நாயகியை படக்குழு தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழ் , தெலுங்கு, இந்தி என் பிஸியாக நடித்தது வரும் காஜல் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல், ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி உள்ளிடட படங்களில்  நடித்துள்ளார். கடந்த வருடம் கவுதம் கிட்சலு என்பவரை மணந்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல்  2017-ல் துவங்கப்பட்ட இந்தியன் 2வில்  கமலுக்கு ஜோடியாக வயதான வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதற்காக அவர் கடினமான மேக்கப்பை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. 

.இந்நிலையில்  காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், நடிகை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்,  இதன் பொருட்டு அனைத்து படப்பிடிப்புகளிலிருந்தும் காஜல் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2விலிருந்து  காஜல் அகர்வால் மாற்றப்படலாம் என தெரிகிறது.

ஏற்கனவே முதல் முறையாக கமல்ஹாசனுடன் நடித்த பிரபல  நடிகர் விவேக் , இந்த ஆண்டின் தொடக்கத்தில் காலமானார். இந்நிலையில் நாயகியும் மாற்றப்படுவது படக்குழுவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!