
பெரம்பலூர் (perambalur) அருகே சாலையில் நாய் கடித்ததில் உயிருக்கு போராடிய குரங்கு (monkey) ஒன்றை வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்து ஓட்டுநர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. குன்னம் அடுத்த ஒதியம் கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு குட்டியை, தெரு நாய்கள் கடித்ததாக கூறப்படும் நிலையில், காயங்களுடன் அந்த குரங்கு மயங்கியுள்ளது.
இதனை பார்த்த அவ்வழியாக சென்ற அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் பிரபு, உடனடியாக அந்த குரங்கை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். சி.பி.ஆர் முதலுதவி சிகிச்சை போல், குரங்கின் மார்பு பகுதியில் கை வைத்து அழுத்தியும், குரங்கின் வாயோடு தனது வாயை வைத்து ஊதி மூச்சு கொடுத்தும் முதலுதவி செய்தார்.
இதில் அந்த குரங்கு கண் விழித்த நிலையில், பெரம்பலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வைரலாகி வரும் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் (sivakarthikeyan), குரங்குக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய பிரபு என்பரை வியந்து பாராட்டி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.