நீண்ட காலத்திற்குப் பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதுகுறித்த முழு விளக்கம் உள்ளே..

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாவார். இவருக்கு சிறுவயதிலிருந்தே பைக், கார் பந்தயங்கள் மீது பிரியம். இந்த ஆர்வத்தால் 'அஜித் குமார் ரேஸிங்' என்ற அணியை இவர் நடத்தி வருகிறார்.

இதுவரை திரைப்படங்களில் நடித்து சம்பாதித்த மொத்த பணத்தையும் இதில் முதலீடு செய்துள்ளார். மேலும் வெளிநாட்டு வீரர்களும் இந்த அணியில் களமிறங்குவதால் அதற்கு ஏராளமான முதலீடுகள் தேவைப்படுவதால் நடிகர் அஜித் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எனர்ஜி ட்ரிங்க் பிராண்டான 'கேம்பா எனர்ஜி' (campa energy) விளம்பரத்தில் நடித்துள்ளார். கேம்பா எனர்ஜி பானத்தை அவர் அருந்துவது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த விளம்பரத்திற்கு அஜித்குமார் மிகப்பெரிய அளவில் பணம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் நீண்ட இடைவெளிக்கு பிறகு விளம்பரத்தில் வருவது கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. ஆனால் இப்படியொரு எனர்ஜி பானத்தை பிரபலப்படுத்தும் விளம்பரத்தில் நடிக்கலாமா? ரசிகர்களை நலம் வாழ ஊக்குவிக்கும் அஜித், இந்த விளம்பரத்தில் நடித்தது அதிருப்தி அளிப்பதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.