Survivor: கை விட்ட பிக்பாஸ்... தூக்கி விட்ட சர்வைவர்..! ஒரு கோடி பரிசு தொகையை தொக்க அள்ளியது யார் தெரியுமா?

Published : Dec 13, 2021, 02:00 PM IST
Survivor: கை விட்ட பிக்பாஸ்... தூக்கி விட்ட சர்வைவர்..! ஒரு கோடி பரிசு தொகையை தொக்க அள்ளியது யார் தெரியுமா?

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு (Biggboss Show) , வெற்றி வாகை சூடாவிட்டாலும் தற்போது, சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி சிங்கப்பெண் என்பதை நிரூபித்துள்ளார் பிரபல நடிகை விஜய லட்சுமி (Vijayalakshmi).  

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வெற்றி வாகை சூடாவிட்டாலும் தற்போது, சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி சிங்கப்பெண் என்பதை நிரூபித்துள்ளார் பிரபல நடிகை விஜய லட்சுமி.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக களம் இறங்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி தான் ’சர்வைவர்’. இதை தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அர்ஜுன் தற்போது, நடிப்பு, இயக்கம், தயாரிப்பாளர் என்பதை தாண்டி, ஒரு தொகுப்பாளராகவும் களத்தில் இறங்கி கலக்கி தொகுத்து வழங்கி வந்தார். ஒரு தீவில் இயக்கையோடு விளையாட கூடிய 'சர்வைவர்' போட்டியில் வெற்றி பெற, மன வலிமை, உடல் வலிமை, சமயோஜிதமாக யோசித்தால், போன்ற பல திறமைகளும் இருந்தால் தான் வெற்றிபெற முடியும் என்பதை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில தினங்களிலேயே மற்ற போட்டியாளர்கள் தெரிந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்: Katrina Kaif: திருமண லெஹங்காவில் சிவப்பு ரோஜா போல் மின்னிய கத்ரீனா! உருக்கமான பதிவுடன் வெளியிட்ட புகைப்படங்கள்

 

காடர்கள் அணி, வேடர்கள் அணி என இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் விளையாடி வந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே இந்த நிகழ்ச்சியில் இருந்து அடுத்தடுத்து போட்டியாளர்கள் சிலர் வெளியேற்றப்பட்டனர். டாஸ்குகளும் கடுமையாகிக்கொண்டே சென்று கொண்டிருந்த நிலையில், இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தொகுப்பாளர் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

மேலும் செய்திகள்: Rajinikanth Birthday Celebration: வேஷ்டி சட்டையில்... குடும்பத்தோடு குதூகலமாக பிறந்தநாள் கொண்டாடிய தலைவர்!

 

சுமார் 2 மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியது. இறுதி போட்டிக்கு நேரடியாக நடிகை விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டார். இவரை  அடுத்து வேனசா மற்றும் சரண் ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் போட்டியாளரை ஓட்டுகள் மூலம்  தேர்வு செய்ய  ஜூரிகளாக நந்தா, அம்ஜத், ஐஸ்வர்யா, நாராயணன், விக்ராந்த், இனிகோ பிரபாகர், உமாபதி ஆகியோர் அளித்த வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்: Meera Mithun: "பேய காணோம்" படப்பிடிப்பில் இருந்து நள்ளிரவில் திடீர் என 6 பேருடன் எஸ்கேப்பான நடிகை மீரா மிதுன்!

 

அந்த வகையில் தமிழில் சென்னை 28 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான விஜயலட்சுமி 4 ஓட்டுகளையும், சரண் 3 ஓட்டுகளையும் பெற்றார். இறுதி போட்டி வரை வந்த மற்றொரு போட்டியாளரான வேனசாவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காதது ஏமாற்றத்தை கொடுத்தது. இவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படியில்... அதிக ஓட்டுகளை பெற்ற, விஜயலக்ஷ்மி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு 1 கோடி பரிசையும் தட்டி சென்றுள்ளார்.'

மேலும் செய்திகள்: BiggBoss 5 Tamil: உலக மஹா நடிப்புடா சாமி.. ஓட்டை மாற்றி போட்ட கறுப்பாடு இவரா? அந்த சத்தியம் தான் கொஞ்சம் ஓவர்

 

இவர் ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே வந்து விளையாடி வெளியேறிய பின்னர், பெரிதாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் தற்போது இவர் கலந்து கொண்ட மற்றொரு ரியாலிட்டி நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சி இவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டுள்ளது. ஆண்களுக்கு நிகராக அனைத்து டாஸ்குகளையும் எதிர்கொண்டு விளையாடிய சிங்கப்பெண் என நிரூபித்துள்ள இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தென்னிந்தியாவின் 'ராஜமாதா'; 40 ஆண்டுகால உழைப்பு; 200 கோடி சொத்து: ரம்யா கிருஷ்ணனின் அசுர வளர்ச்சி!
லாக்கப்பில் கார்த்திக்: துடி துடித்துப் போன ரேவதி: அதிரடி திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்!