Nayanthara : நயன்தாரா என் தலைவனுக்கு தான் ; சிம்பு ரசிகரின் கமெண்ட்டால் கடுப்பான விக்னேஷ் சிவன்!!

Kanmani P   | Asianet News
Published : Dec 13, 2021, 02:26 PM ISTUpdated : Dec 13, 2021, 02:33 PM IST
Nayanthara : நயன்தாரா என் தலைவனுக்கு தான் ; சிம்பு ரசிகரின்  கமெண்ட்டால் கடுப்பான விக்னேஷ் சிவன்!!

சுருக்கம்

Nayanthara : சிம்புவின் ரசிகர் ஒருவர் நயன் என் தலைவன் சிம்புவுக்கு தான் என்று கமெண்ட் செய்திருந்தார். 

தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் சிம்பு காதல் தான் மிகவும் பிரபலமானது.அதுமட்டுமல்லாமல் இவர்களைப் பற்றிய வதந்தி பின்னும் இணையதளத்தில் வந்து கொண்டிருக்கிறது. இவர்கள் காதலிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் வல்லவன் திரைப்படத்தில் நடித்து வந்தார்கள்.அப்பொழுது இவர்கள் மிகவும் அன்னியமாக அதி ரொமண்டிக்வுடன் நடித்திருந்தார்கள். இதன் மூலமே அவர்கள் உண்மையாக காதலிக்கிறார்கள் என்று தெரியவந்தது. பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.சிம்பு பல பேட்டிகளில் கூட அவர் தான் என்னை விட்டுவிட்டு சென்றுவிட்டாள் என்று கூறி புலம்பி உள்ளார்.

இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் நம்ம ஆளு திரைப்படத்தின் ரிலீஸின் போது நயன்தாரா மற்றும் சிம்பு ஆகியவர்களின் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் எனவும் அதற்கு 100% மார்க் தரலாம் என்பதை குறிப்பிட்டு இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார். ஆனால் விக்னேஷ் சிவனுக்கு  எதிர்காலத்தில் நயன்தாரா இவரை தான் காதலிக்க போகிறார் என்றே தெரியாமல் போய்விட்டது. 

 

இதற்கிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படம் மிகப் பெரிய ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் அப்டேட்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் இறுதிகட்ட சூட்டிங் மைசூரில் நடக்கவிருக்கிறது என பதிவிட்டிருந்தார்.அந்தப் பதிவின் கீழே சிம்புவின் ரசிகர் ஒருவர் நயன் என் தலைவன் சிம்புவுக்கு தான் என்று கமெண்ட் செய்திருந்தார். ஆனால் இதனை விக்னேஷ் சிவன் கண்டுக்காத படி அமைதியாக இருந்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தென்னிந்தியாவின் 'ராஜமாதா'; 40 ஆண்டுகால உழைப்பு; 200 கோடி சொத்து: ரம்யா கிருஷ்ணனின் அசுர வளர்ச்சி!
லாக்கப்பில் கார்த்திக்: துடி துடித்துப் போன ரேவதி: அதிரடி திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்!