பிரின்ஸ் படத்தின் முதல் ஷோ பார்க்க தனது மனைவி ஆர்த்தி உடன் தியேட்டருக்கு வருகை தந்திருந்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அனுதீப் இயக்கத்தில் நடிகர் நடித்துள்ள திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்திற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு முதல் ஷோ திரையிடப்பட்டது. இதற்காக அதிகாலையிலேயே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், சிவகார்த்திகேயனின் கட் அவுட்டும் பாலாபிஷேகம் செய்தும் மகிழ்ந்தனர்.
பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் 600 திரையரங்குகளிலும், ஆந்திராவில் 300 திரையரங்குகளிலும் இப்படத்தை ரிலீஸ் செய்து உள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது இதுவே முதன்முறை ஆகும். கார்த்தியின் சர்தார் படத்துக்கு போட்டியாக இப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... தீபாவளி ரேஸில் தட்டித்தூக்கினாரா சிவகார்த்திகேயன்?... ‘பிரின்ஸ்’ படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ
|| ரசிகர்களோடு பிரின்ஸ் படம் பார்க்க தியேட்டருக்கு திடீர் விசிட் அடித்த சிவகார்த்திகேயன்..ரசிகர்கள் மகிழ்ச்சி | | | | | | pic.twitter.com/TjADV0TVNR
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் முதல் ஷோ பார்க்க நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி உடன் தியேட்டருக்கு வருகை தந்திருந்தார். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக ரோகினி தியேட்டரில் ரசிகர்கள் பிம்பிலிக்கி பிலாப்பி பாடலுக்கு நடனமாடியதை பார்த்து உற்சாகமடைந்த சிவகார்த்திகேயன் தானும் சேர்ந்து நடனமாடி அசத்தினார். அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரின்ஸ் படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். தமிழ் பையனுக்கும் வெளிநாட்டு பெண்ணுக்கும் இடையே மலர்ந்த காதலை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ள படம் தான் பிரின்ஸ். இப்படத்தில் முக்கிய ரோலில் சத்யராஜும், வில்லனாக பிரேம்ஜியும் நடித்துள்ளனர். இப்படம் மூலம் சிவகார்த்திகேயன் தெலுங்கில் அறிமுகமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தியேட்டரில் ரசிகர்களோடு ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயன் pic.twitter.com/WMJFr62EfO
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இதையும் படியுங்கள்... கோப்ரா கற்றுத்தந்த பாடம்... 12 நிமிட சீனுக்கு கத்திரி போட்ட படக்குழு - ரிலீசுக்கு முன்பே உஷாரான பிரின்ஸ்