தீபாவளி ரேஸில் தட்டித்தூக்கினாரா சிவகார்த்திகேயன்?... ‘பிரின்ஸ்’ படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ

Published : Oct 21, 2022, 07:37 AM IST
தீபாவளி ரேஸில் தட்டித்தூக்கினாரா சிவகார்த்திகேயன்?... ‘பிரின்ஸ்’ படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ

சுருக்கம்

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ், பிரேம்ஜி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள பிரின்ஸ் படத்தின் டுவிட்டர் விமர்சனம் வெளியாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி விருந்தாக இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அனுதீப் இயக்கியுள்ள இப்படம் தமிழகத்தில் 600 திரைகளில் வெளியாகி உள்ளது. இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டானதால், இப்படத்தின் மூலம் அவர் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பாரா என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் முதல் ஷோ இன்று அதிகாலை 5 மணிக்கு திரையிடப்பட்டது. இதற்காக அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து, தார தப்பட்டை முழங்க ஆட்டம் போட்டு அமர்களப்படுத்தியதால் தியேட்டரே திருவிழாக்கோலம் பூண்டது. தற்போது பிரின்ஸ் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : பிரின்ஸ் படத்தின் முதல் பாதியை பார்க்கும்போது இது பண்டிகைக்கான படம் என்பது தெரிகிறது. குடும்பத்தோடு என்ஜாய் பண்ணி பார்க்கக்கூடிய படமாக உள்ளது. இது அனுதீப் சம்பவம். இரண்டாம் பாதியும் நன்றாக ஆரம்பித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில், முதல் பாதியின் முடிவில் படம் சுமாராகவே உள்ளது. கதை இல்ல. புதுசா ஒன்னும் இல்ல. அங்கங்க காமெடி ஒர்க் அவுட் ஆகி இருக்கு. ஆனா பெரும்பாலான இடங்களில் பொறுமையை சோதிக்கின்றன. விஷுவல் நன்றாக உள்ளது. சிவகார்த்திகேயன் சூப்பராக இருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், பிரின்ஸ் முதல் பாதி திரைக்கதை சரியில்லை. நிறைய பேசுறாங்க ஆனா தீம் எதுவுமே இல்ல. இப்படத்தில் ஒரே ஒரு நல்ல விஷயம் தமனின் இசை. நான் ஜாதி ரத்னலு பார்த்திருக்கிறேன், அது நல்ல படம். ஆனால் பிரின்ஸ் தற்போது வரை என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், பிரின்ஸ் படத்தின் முதல் பாதி ஃபன் ஆக இருக்கிறது. செண்டிமெண்ட் எதுவும் இல்லாமல் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களில் பார்த்த சிவகார்த்திகேயனை பார்த்த ஒரு அனுபவம் கிடைக்கிறது. நிறைய இடத்துல அனுதீப்பின் மேனரிசத்தை பின்பற்றி இருக்கிறார் எஸ்.கே. என குறிப்பிட்டுள்ளார்.

வேறொரு பதிவில், பிரின்ஸ் முதல் பாதி ஆவரேஜ் ஆக இருப்பதாகவும், கிரிஞ்ச் காமெடிகள் தான் இருக்கின்றன. அதில் சில ஒர்க் அவுட் ஆகி உள்ளது, சில சொதப்பி உள்ளது. ஹீரோயின் மரியா ரொம்ப அழகா இருக்காங்க. சத்யராஜ் - சிவகார்த்திகேயன் காம்போ பார்க்க நன்றாக உள்ளது. பாடல்கள் ஆவரேஜ் தான் என பதிவிட்டுள்ளார்.

பிரின்ஸ் முதல் பாதியை பொறுத்தவரை சிவகார்த்திகேயன் இண்ட்ரோ சூப்பர். பிம்பிலிக்கி பிலாப்பி மற்றும் ஜெசிகா பாடலில் அவரின் நடனம் அசத்தலாக உள்ளது. அனுதீப்பின் காமெடிகளில் நிறைய ஒன்லைன் காமெடிகள் ஒர்க் அவுட் ஆகி உள்ளன. மரியாவின் தோற்றமும், அவரின் தமிழும் கியூட்டாக உள்ளது. என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில், பிரின்ஸ் முதல் பாதியில் சிவகார்த்திகேயனின் நடிப்பு சூப்பராக உள்ளது. தமனின் பாடல்களும், பின்னணி இசையும் வேறலெவல். நில பிரச்சனை பற்றிய படம். காமெடி சொதப்பல், காதல் பகுதி நன்றாக உள்ளது. டாக்டர், டான் படங்களை விட பிரின்ஸ் சுமார் தான். என பதிவிட்டுள்ளார்.

மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும்போது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கு இதுவரை கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... பெற்றோருக்காக ரக்ஷிதா எடுத்த முடிவு..! மனதார பாராட்டும் ரசிகர்கள்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மம்மூட்டியின் ‘களம்காவல்’ மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?