திரிஷாவின் உதட்டசைவை பார்க்க ஏதோ கெட்ட வார்த்தை பேசுவது போல இருந்தது. இதை கண்டதும் விக்ரம் அதிர்ச்சியாகும் வீடியோ ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகிறது.
மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. 20 ஆண்டு பலரும் போராடியும் படமாக்கப்படாத பொன்னியின் செல்வனை தற்போது நனவாக்கியுள்ளார் மணிரத்தினம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி,ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி 250 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்துள்ளது. ராஜராஜ சோழனின் வாழ்க்கை வரலாற்றை ஒத்த இந்த நாவலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு குழு படை எடுத்திருந்தது அது குறித்தான புகைப்படங்களும் வைரலானது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் உலக கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் , ப்ரோமோஷன் போது திருஷா, விக்ரமை கெட்ட வார்த்தைகள் திட்டியதாக ஒரு வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...வெற்றிமாறனின் பார்வை சரியில்லை..சோழன் குறித்த விமர்சனத்திற்கும் கண்டனம் தெரிவித்த குஷ்பு
அந்த வகையில் இந்தியில் நகைச்சுவை நடிகர் கபில் ஷர்மாவின் நிகழ்ச்சியில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகள் காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு பின்னணிகள் பாடல் ஓட முன்னாள் இருப்பவர் சொல்லும் வார்த்தைகளை சரியாக கேட்டு பின்னால் இருப்பவருக்கு கடத்த வேண்டும் என்பதுதான் டாஸ்க். இதில் முன்னாள் இருந்த சோபிதா ”குர்தா” என்ற வார்த்தையை சொல்ல அதை திரிஷா, பின்னால் இருந்த விக்ரமுக்கு சொல்ல முயன்றார். ஆனால் திரிஷாவின் உதட்டசைவை பார்க்க ஏதோ கெட்ட வார்த்தை பேசுவது போல இருந்தது. இதை கண்டதும் விக்ரம் அதிர்ச்சியாகும் வீடியோ ஒன்றுதான் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Thalaivan Nam Inam 😂🤣🔥pic.twitter.com/hqGuOMUWYv
— RamKumarr (@ramk8060)