
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நம்பர் ஒன் சீரியலாக ‘சிறகடிக்க ஆசை’ இருந்து வருகிறது. இந்த சீரியல் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கதாநாயகனாக வெற்றி வசந்தும் கதாநாயகியாக கோமதிப்பிரியாவும் நடித்த வருகின்றனர் பூக்களை நடத்தி வரும் ஏழைப் பெண் ஒருவர் குடிகாரரான முத்துவை திருமணம் செய்து கொள்கிறார் ஆரம்பத்தில் இருவரும் வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து கொள்கின்றனர். பின்னர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஆரம்பிக்கின்றனர். திருமணம் முடிந்து முத்துவின் வீட்டிற்கு வந்த மீனாவை அவரது மாமியார் விஜயா மிகவும் கொடுமைப்படுத்துகிறார்.
விஜயாவின் மூன்று மருமகள்களில் மூத்த மருமகள் மற்றும் கடைசி மருமகள் இருவரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் மீனாவை எப்போதும் விஜயா மோசமாக நடத்துகிறார். தற்போது மூத்த மருமகள் ரோகிணி பணக்காரி கிடையாது, அவர் பொய் சொல்லி தான் தனது மகனை திருமணம் செய்து கொண்டார் என்கிற உண்மை விஜயாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ரோகிணி மீது கடும் கோபத்தில் இருக்கும் விஜயா, ரோகிணியையும் மோசமாக நடத்த துவங்குகிறார். இந்த நிலையில் ரோகிணி குறைத்து ஒவ்வொரு உண்மையாக விஜயாவுக்கு தெரிய வருகிறது. அந்த வரிசையில் ரோகிணி செய்துள்ள விஷயம் ஒன்று விஜயாவை கடுமையான கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த சீரியலில் ரவுடியாக இருக்கும் சிட்டி ரோகிணிக்கு தங்க செயின் ஒன்றை பரிசாக கொடுக்கிறார். அது திருடுபட்ட நகை என்று தெரியாமல் ரோகிணி அந்த செயினை விஜயாவுக்காக வாங்கி வந்ததாக பொய் கூறி அவருக்கு பரிசளிக்கிறார். விஜயாவுக்கு ரோகிணி மீது கோபம் இருக்கும் போதிலும் தங்கச்செயின் என்பதால் அதை வாங்கி கொள்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவில் அந்த செயினை போட்டுக்கொண்டு விஜயா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று நடனமாடிக் கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு வந்த பெண் ஒருவர் விஜயா கழுத்தில் இருக்கும் செயினை பார்த்து இது தன்னுடைய செயின் போல இருப்பதாக கூறி சந்தேகிக்கிறார்.
விஜயாவிடம் சென்று இது தன்னுடைய செயின் போலவே இருப்பதாக கூறுகிறார். இது திருட்டுப்போன தன்னுடைய நகை என்று அந்தப் பெண் கூட விஜயா அதிர்ச்சியில் உறைகிறார். மேலும் தன்னுடைய பெயரின் முதல் எழுத்தும், தன்னுடைய கணவரின் பெயரின் முதல் எழுத்தும் அந்த டாலரின் பின்புறம் இருப்பதாக கூறுகிறார். அதை பார்க்கும் விஜயாவுக்கு ரோகிணி மேல் கடும் கோபம் ஏற்படுகிறது. வீட்டிற்கு வரும் விஜயா ரோகிணியை சரமாரியாக தாக்கி அடிக்கிறார். மேலும் வீட்டில் உள்ள அனைவரிடமும் இதை இவள் வாங்கி வரவில்லை. திருடி வந்திருக்கிறாள் என்கிற உண்மையை போட்டு உடைக்கிறார். உண்மை வெளியான நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் ரோகிணி கலங்கி போய் நிற்கிறார்.
சில நாட்களாக சீரியலின் கதை நன்றாக போகாத நிலையில் தற்போது மீண்டும் விறுவிறுப்புக்கு வந்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். சீதாவின் திருமணம், எமனாக வந்த முத்துவின் கதை என்று சில நாட்களாக இயக்குனர் கதையை போர் அடித்து விட்டார். இந்த நிலையில் தற்போது ரோகிணி மீண்டும் மாட்டிக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.