அவுங்க 2 பேரை விட தெருநாய் கூட இருந்தா நான் பாதுகாப்பா இருப்பேன்- வைரமுத்துவை மறைமுகமாக அட்டாக் பண்ணிய சின்மயி

By Asianet Tamil cinema  |  First Published May 14, 2022, 1:01 PM IST

chinmayi :  உண்மையில் மனிதர்களைவிட நாய்கள் தான் பெண்களுக்கு நம்பகமான ஒன்றாக இருக்கின்றது என பிரபல பின்னணி பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.


மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெறும் ஒரு தெய்வம் தந்த பூவே என்கிற பாடலை பாடியதன் மூலம் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. இதையடுத்து பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய சின்மயி, குறுகிய காலத்திலேயே பேமஸ் ஆனார்.

இதனிடையே கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கொடுத்த மீடூ புகார் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக பல்வேறு விமர்சனங்களை அவர் எதிர்கொண்டாலும், தன்னுடையை நிலைப்பாட்டில் தீர்க்கமாக உள்ளார் சின்மயி. அதுமட்டுமின்றி பெண்களுக்கு எதிராக நடக்கு அநீதிகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

பெண் ஒருவர் ஆண்களை தெரு நாய்களோடு ஒப்பிட்டு பேசியதை எதிர்த்து பிரியாணி மேன் என்பவர் தனது யூடியூப் சேனல், கண்டனத்தை பதிவு செய்தது மட்டுமின்றி, கொச்சையாக விமர்சித்திருந்தார். இந்த விஷயம் பாடகி சின்மயி காதுக்கு போக, இதைக்கேட்டு கொதித்தெழுந்த அவர் தக்க பதிலடியும் கொடுத்துள்ளார்.

Honestly - I think women and humans would find dogs more trustworthy than humans in general. As for me - I d be safer with a therunaai in a room than with a Radha Ravi or the tamizh poetttttuuu
Ask any woman.

— Chinmayi Sripaada (@Chinmayi)

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உண்மையில் மனிதர்களைவிட நாய்கள் தான் பெண்களுக்கு நம்பகமான ஒன்றாக இருக்கின்றது. என்னைப் பொருத்தவரை நான் ஒரு ரூமில் ராதாரவி மற்றும் தமிழ் கவிஞருடன் இருப்பதைவிட தெருநாய் உடன் இருந்தால் பாதுகாப்பாக இருப்பேன் என சாடி உள்ளார். சின்மயியின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ஹாலிவுட் ரேஞ்சில் KGF 3... ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை பக்கா பிளான் ரெடி - தயாரிப்பாளர் வெளியிட்ட மாஸ் அப்டேட்

click me!