Udhayanidhi Stalin : அண்ணாத்த.. பீஸ்ட்.. எதற்கும் துணிந்தவன் - ஹிட் எது... ஃபிளாப் எது?- ஓப்பனாக சொன்ன உதயநிதி

By Asianet Tamil cinema  |  First Published May 14, 2022, 9:44 AM IST

Udhayanidhi Stalin : உதயநிதி நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வருகிற மே 20-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கு எம்.எல்.ஏ. ஆனார். இதையடுத்து அரசியலில் கவனம், செலுத்த முடிவெடுத்த உதயநிதி, நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளார். இதனால் கைவசம் உள்ள படங்களை வேகமாக நடித்து முடிக்க முனைப்பு காட்டி வருகிறார் உதயநிதி.

தற்போது இவர் கைவசம் நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் மற்றும் மகிழ் திருமேணி இயக்கத்தில் ஒரு படம் ஆகியவை உள்ளன. இதில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வருகிற மே 20-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Tap to resize

Latest Videos

அப்போது, இவர் அண்மையில் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் வெளியிட்ட அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், காத்துவாக்குல ரெண்டு காதல், பீஸ்ட் ஆகிய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதில் எந்த படம் ஹிட், எந்த படம் பிளாப் என அவர் கூறினார்.

அதன்படி ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதி நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதாகவும், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெற்றிப்படமாக அமைந்ததாகவும் கூறினார். பிரபாஸின் ராதே ஷ்யாம் மட்டும் தோல்வியை தழுவியதாக அவர் ஓப்பனாக கூறினார்.

இதையும் படியுங்கள்... ஸ்டண்ட் ஜோடியின் காதல் ‘தீ’ருமணம்...! - உடலில் நெருப்பிட்டு சாகசம்... கல்யாண வீட்டை கலேபரம் ஆக்கிய மணமக்கள்

click me!