சன்னல் கம்பியில் பிணமாக கேரள நடிகை...போலீசில் வசமாக சிக்கிய கணவர்

Kanmani P   | Asianet News
Published : May 13, 2022, 06:50 PM IST
சன்னல் கம்பியில் பிணமாக கேரள நடிகை...போலீசில் வசமாக சிக்கிய  கணவர்

சுருக்கம்

கேரளாவில் பிரபல மாடலாக இருந்து வரும் ஷஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.   

மலையாள மாடலும் நடிகையுமான சஹானா வியாழக்கிழமை இரவு வீட்டு சன்னல் கம்பியில் தூக்கிட்டு நிலையில் இறந்து கிடந்தனர். அவரது மரணம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அவரது கணவர் சஜ்ஜத்தை போலீசார் காவலில் எடுத்துள்ளனர்.

வியாழக்கிழமை தனது 22வது பிறந்தநாளைக் கொண்டாடிய சஹானா, அதே இரவில் கோழிக்கோட்டில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக புகார் அளித்த நடிகையின் குடும்பத்தினர் அவர் தனது கணவரால் குடும்ப வன்முறையை எதிர்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். சஹானா கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சஜ்ஜத்தை திருமணம் செய்த வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

சஹானா மரணம் குறித்து பேசிய அவரது தாயார்,'“என் மகள் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ள மாட்டாள், அவள் கொலை செய்யப்பட்டாள். கணவர் அடிப்பதாகவும், சரியாக சாப்பாடு கொடுக்கவில்லை என்றும் என்னிடம் புகார் அளித்தாகவும், தன மகள் சித்திரவதை செய்யப்பட்டாள். அவள் கொலை செய்யப்பட்டாள். போலீசார் விசாரணை நடத்தி எனது மகளுக்கு நீதி வழங்க வேண்டும்” என்று சஹானாவின் தாய் மாத்ருபூமி செய்தியிடம் கூறியுள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம்  நடிகை மரணம் குறித்து தெரிவித்த விசாரணை அதிகாரி,'அவர் நகைக் கடைகளின் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு திரைப்படத்திலும் நடித்தார். "சஜ்ஜாத் முன்பு கத்தாரில் பணிபுரிந்தார், ஆனால் இங்கு வேலையில்லாமல் இருக்கிறார். சமீபத்தில் சஹானா ஒரு படத்தில் நடித்துள்ளார்.. படத்தில் நடித்ததற்காக சஹானா பெற்ற பணம் தொடர்பாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது,"என தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!