sivakarthikeyan : சிவகங்கை மக்களுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் செய்த மிகப்பெரிய உதவி... குவியும் பாராட்டுக்கள்

By Asianet Tamil cinema  |  First Published May 13, 2022, 11:53 AM IST

sivakarthikeyan : பிசியான நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தனது தந்தை பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். அதன்மூலம் ஏராளமான உதவிகளையும் செய்துவருகிறார்


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள டான் திரைப்படம் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. இதுதவிர அனுதீப் இயக்கும் ஒரு படத்திலும், ரங்கூன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தனது தந்தை பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். அதன்மூலம் ஏராளமான உதவிகளையும் செய்துவருகிறார் சிவகார்த்திகேயன். அவர்செய்யும் உதவிகள் அனைத்தும் வெளியில் தெரியாவிட்டாலும், ஒருசிலவை குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகிவிடும்.

Tap to resize

Latest Videos

அந்தவகையில், தற்போது சிவகங்கை மாவட்ட மக்களின் நலனுக்காக அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஒன்றை இலவசமாக வழங்கி உள்ளார் சிவகார்த்திகேயன். அந்த ஆம்புலன்ஸின் மதிப்பு ரூ.21 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த ஆம்புலன்ஸ் நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் அந்த வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  Blue sattai Maran : ஒரே போட்டோ... ஒட்டுமொத்த படமும் குளோஸ் - டான் படத்தை டார் டாராக கிழித்த ப்ளூ சட்டை மாறன்

click me!