Blue sattai Maran : ஒரே போட்டோ... ஒட்டுமொத்த படமும் குளோஸ் - டான் படத்தை டார் டாராக கிழித்த ப்ளூ சட்டை மாறன்

By Asianet Tamil cinema  |  First Published May 13, 2022, 11:12 AM IST

Blue sattai Maran : சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், டான் படத்தை விமர்சிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் டான். பிரியங்கா மோகன், சிவாங்கி, பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.

pic.twitter.com/t5lg9oGBuJ

— Blue Sattai Maran (@tamiltalkies)

கல்லூரி கதையம்சம் கொண்ட இப்படம் இன்று ரிலீசாகி உள்ளது. இப்படத்துக்காக இன்று அதிகாலை 4 மணிக்கு தமிழகம் முழுவதும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. இதனால் அதிகாலை முதலே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து மேள தாளங்கள் முழங்க கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tap to resize

Latest Videos

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் சிபி சக்ரவர்த்தி, இசையமைப்பாளர் அனிருத், நடிகை சிவாங்கி போன்ற பிரபலங்கள் அதிகாலை காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து சென்னையில் உள்ள ரோகினி மற்றும் வெற்றி தியேட்டரில் பார்த்து ரசித்தனர். டான் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினாலும், இப்படம் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது..

இந்நிலையில், சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், டான் படத்தை விமர்சிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இளைஞர்கள் சிலர் தியேட்டரில் தூங்குவது போன்ற அந்த புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். டான் படத்தை தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அட்லீயின் சிஷியன் என நிரூபித்த சிபி... 2 படங்களின் தாக்கத்துடன் கூடிய ‘டான்’ எப்படி இருக்கு? - முழு விமர்சனம்

click me!