சீறிப்பாயும் சிங்கம்.... இயக்குனருக்கு பெற்றுக்கொடுத்தது தங்கம்...!!!

 
Published : Feb 11, 2017, 06:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
சீறிப்பாயும் சிங்கம்.... இயக்குனருக்கு பெற்றுக்கொடுத்தது தங்கம்...!!!

சுருக்கம்

இயக்குனர் ஹரி இயக்கத்தில்  சூர்யா நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள சிங்கம் 3 பாகம், பல தடைகளை கடந்து வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே வெளிவந்த சிங்கம், சிங்கம் 2,ஆகிய இரண்டு பாகங்கள் வெற்றி பெற்றாலும், மூன்றாம் படத்துடன் ஒப்பிடும் போது சற்று குறைவுதான் என கூறப்படுகிறது. காரணம்....  தற்போதைய காலத்திற்கு ஏற்றாப்போல் காட்சிகளை செதுக்கி இருக்கிறார் ஹரி .

எப்படியெல்லாம், இந்தியாவை மற்ற நாடுகள் மாசுபடுத்துகின்றன என்பது போல பல முக்கிய விஷயங்களை வெளிப்படுத்தி... பரபரப்பான  திரைக்கதை அமைத்து ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறார்.

முக்கியமாக இரண்டு கவர்ச்சியான கதாநாயகிகள் படத்தில் இருந்தாலும். தேவைக்கேற்ப அவர்களை கச்சிதமாக பயன்படுத்தி கதைக்கு ஏற்ற காதல் உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு பாகத்தை விட செண்டிமெண்ட் இந்த படத்தில் குறைவு தான், ஆனால் திரைக்கதையில் நிறைய திருப்புமுனைகள் கொண்டு வந்து ரசிகர்களை கவர்ந்திருப்பது  பலம்.

இப்படி கச்சிதமாக வெட்டுகளை போட்டும், சூர்யாவை கர்ஜனை செய்யும் பக்கா போலீசாக மாற்றி இருப்பதால் ஹரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது . 

அதே போல தன்னுடைய நடிப்பை சற்றும் பிசறாமல் வெளிப்படுத்தியுள்ள சூர்யாவிற்கு ரசிகர்கள் தொடர்ந்து தனது சமூக வலைத்தளம் போன்றவற்றில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் அரவிந்சாமி போன்ற பல பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்தை சூர்யாவிற்கு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில்  நேற்று மட்டும் சிங்கம் 3,  25 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து   இயக்குனர் ஹரிக்கு 2 டி என்டர்டென்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராஜசேகரபாண்டியன் இயக்குனர் ஹரிக்கு தங்கச்செயினை பரிசாக அளித்துள்ளார். இந்த சந்தோஷத்தோடு இயக்குனர் ஹரியும் விக்ரமை வைத்து இயக்கும் சாமி இரண்டாம் பாகத்திற்கு தயாராகிறார் என கூறப்படுகிறது .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!