மூன்ரெழுத்துக்காரரின் 75 நாள் மௌனம்.... கவிதையில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய பார்த்திபன்...!!!

 
Published : Feb 11, 2017, 04:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
மூன்ரெழுத்துக்காரரின் 75 நாள் மௌனம்.... கவிதையில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய பார்த்திபன்...!!!

சுருக்கம்

தமிழகத்தில் தற்போது வரை யாரும் எதிர்பாராத பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவின் வலி கூட  இன்னும் பலரது நெஞ்சங்களில் இருந்து நீங்காத நிலையில்.

தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் அதை விட மக்களுக்கு அதிக வலியை கொடுத்துள்ளது.  
இதுகுறித்து அரசியல்வாதிகள் மட்டுமின்றி நடிகர் கமல்ஹாசன், விசு, கங்கை அமரன், ஸ்ரீப்ரியா, கௌதமி  போன்ற திரையுலகினர்களும் தைரியமாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகரும்,இயக்குனருமான  பார்த்திபன் தற்போதைய அரசியல் நிலை குறித்து  கவிதை எழுதி  அதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர்  எழுதிய கவிதை இதோ...
 
முதன்முறையாக ... மறைந்த 
முதல்வர் சமாதிக்கு சென்றேன்.
தியானிக்க அல்ல... ஜீரணிக்க !
மரணத்தின் மர்மம்,
மூன்ரெழுத்துக்காரரின் 75 நாள்
மௌனத்தின் மாமர்மம்,
அரசியல் அதர்மங்கள்,
ரிசார்ட்டில் Mla-க்கள்,
ரிமோட்டாய் கோடிகள்,
நடப்பவை நடந்தவை....
 
விளங்காமல் கலங்கரை
விளக்கத்திலிருந்து நடந்து
சென்றேன். கட்சிகளின் 
கல்மிஷங்கள் இல்லாத
Mgr-ன் விசுவாசிகள்,
அதிமுக தொண்டர்கள்,
அறியா பொதுஜனங்கள்
அணையா தீபங்களாய்
அங்கே ஒளியூட்டல் !
 
அம்மா'என்றழைக்கப்பட்டவரின்
ஆன்மா என்ன நினைக்கும் ?
எனக்கும் அவருக்குமான சில
சந்திப்புகளும் சம்பாஷைனைகளும்
வந்து போயின நினைவில்!
நம்பிக்கை துரோகமும்
துரோகிகளின் நம்பிக்கையும்
எதுவுமே சகிக்கல!
 
திருமதி சசிகலாவோ
திருமிகு OPS-ஸோ
ஆட்சியமைப்பது
சட்ட பூர்வமேயாகையால்
சட்டு புட்டுன்னு 
சட்டசபைக்கு வந்து
மக்கள் பணி பாருங்கள்!
 
எம்மக்கள் திருந்திவிட்டார்கள்!!!
மறுதேர்தலை சந்திக்க வாருங்கள் !
நோட்டுக்காக அல்ல
நாட்டுக்காகவே ஓட்டு!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!