
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து ஓட்டு போட்ட அத்தனை மக்களும், அவரால் ஒருமுறை முதலமைச்சர் என கை காட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்தனர்.
பின்னர் அவர் மறைந்த பிறகும் கடந்த இரண்டு மாதங்கள் முதல்வர் பதவியில் அவர் தான் சிறப்பாக பணியாற்றிவந்தார். ஆனால் அவரை திடீரென பதவி விலக செய்துவிட்டு சசிகலா அந்த பதவிக்கு வரத்துடிக்கும் மனப்பான்மையை கிட்டத்தட்ட தமிழக மக்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக கண்டித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஜெயலலிதாவுக்காக ஓட்டு போட்ட நிலையில் அந்த ஓட்டை பயன்படுத்தி சம்பந்தம் இல்லாத ஒருவர் பதவிக்கு வருவது குறித்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் பிரபல நடிகை ஸ்ரீப்ரியா, 'தயவு செய்து என் ஓட்டை திருப்பி தாங்கடா என்று ஆத்திரத்துடன் ஆத்திரத்தில் பொறுமை இழந்து மரியாதையை கூட தராமல் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அவர் ஒரு பிரபல நடிகை என்பதை மீறி தற்போது இதுபோல் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது ஒரு வாக்காளரின் உச்சக்கட்டம் என்றே கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.