தீபாவளி ரேசில் இருந்து பின்வாங்கியது சிம்புவின் மாநாடு... படத்தின் வெற்றி பாதிக்கும் என அஞ்சி இந்த முடிவு.!!

Published : Oct 18, 2021, 01:25 PM ISTUpdated : Oct 18, 2021, 01:36 PM IST
தீபாவளி ரேசில் இருந்து பின்வாங்கியது சிம்புவின் மாநாடு... படத்தின் வெற்றி பாதிக்கும் என அஞ்சி இந்த முடிவு.!!

சுருக்கம்

முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது. யாரோடும் போட்டி என்பதல்ல.. ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை பார்ப்பது வழக்கம், அதை கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம். 

தீபாவளிக்கு வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் வெளியீட்டு தேதியை மாற்றி படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- திரை உலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்... நீடித்த பெருங்கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்கு காத்திருக்கிறான் மாநாடு. 

இதையும் படியுங்கள்: முதல்வருக்கு அடுத்தடுத்து போன் போட்ட பிரதமர் மோடி, அமித்ஷா.. நம்பிக்கை கொடுத்த அந்த ஒற்றை வார்த்தை.

முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது. யாரோடும் போட்டி என்பதல்ல.. ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை பார்ப்பது வழக்கம், அதை கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம். போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை, அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமும் அல்ல. நமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப் பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கி விடலாம் தான், ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது.

இதையும் படியுங்கள்: அமைச்சராக இருந்த 5 ஆண்டில் 60 கோடி சொத்து குவிப்பு.. மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், மனைவி மீது FIR.

அதேபோல் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்களும், என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும். நஷ்டம் அடையக் கூடாது, சில காரணங்களுக்காக ஏன் என் படம் அதன் வெற்றியும் பலியாக வேண்டும். ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாகவுள்ளது, நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகும், தீபாவளி  வெளியீட்டில் இருந்து வெளியேறுகிறது மாநாடு. வெளியாகும் படங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள். பொறுமையாக எங்கள் முடிவை ஏற்கப் போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள். என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெயரில் அறிக்கை வெளியாகியுள்ளது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி