பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படங்களாக கர்ணன் மற்றும் கட்டில் தேர்வு!

By manimegalai aFirst Published Oct 17, 2021, 7:41 PM IST
Highlights

பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் (Innovative international film festival Bangalore)  சுமார் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 க்கும் மேற்பட்ட மொழில் கலந்து கொண்டு, இதில் தேர்வு செய்யப்பட்ட படங்கள் திரையிடப்பட்டது. இதன் நிறைவு விழாவில் இன்று(17.10.21) இன்று நடைபெற்ற நிலையில். இரண்டு விருதுகளை தமிழ் திரைப்படங்கள் பெற்றுள்ளது.

பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் ( சுமார் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 க்கும் மேற்பட்ட மொழில் கலந்து கொண்டு, இதில் தேர்வு செய்யப்பட்ட படங்கள் திரையிடப்பட்டது. இதன் நிறைவு விழாவில் இன்று(17.10.21) இன்று நடைபெற்ற நிலையில். இரண்டு விருதுகளை தமிழ் திரைப்படங்கள் பெற்றுள்ளது.

சிறந்த இந்திய திரைப்படமாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் பெற்றது. அதே போல் சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை 'கட்டில்' திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு பெற்றார்.

கர்ணன் படம் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெட்ரா நிலையில், 'கட்டில்' திரைப்படம் தற்போது  ஆடியோ ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை மேப்பிள் லீஃப்ஸ்  புரொடக்சன்ஸ் தயாரிப்பில்  இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு எடிட்டர் பீ.லெனின் கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார்.

விரைவில்  தியேட்டர்களில் 'கட்டில்' திரைப்படும் வெளியாகும் என இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல விருதுகளை பெற்றுள்ளதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!