சிம்புவுக்கு வெற்றியை ஈட்டி கொடுக்குமா ? வெந்து தணிந்தது காடு.. என்னதான் கதை.. இங்கு பார்க்கலாம்

By Kanmani P  |  First Published Sep 15, 2022, 8:28 AM IST

செகண்ட் ஹாப் பக்காவான பேக்கேஜாக உருவாகியுள்ளதாகவும் ஆனாலும் சிம்புவின் வழக்கமான மாஸ் பஞ்ச் டயலாக் எல்லாம் இந்த படத்தில் கிடையாது என்றும் ரசிகர்கள் ஏக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.


தொடர் தோல்விகளுக்கு பிறகு வெங்கட் பிரபுவுடன் சிம்பு கைகோர்த்து இருந்த மாநாடு அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. விமர்சன ரீதியிலும் சரி வணிகரீதியிலும் சரி நல்ல பிளாக் பாஸ்டர் படமாக அந்த படம் அமைந்திருந்தது. இதை அடுத்து சிம்புவின் சூளுரை படி அடுத்து வரும் படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக அமையும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.  ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு வெளியான இந்த படத்திற்காக சிம்பு கடுமையாக உழைத்து உள்ளார் என கூறப்படுகிறது. தனது உடல் எடையை வெகுவாக குறைத்து இருந்த சிம்புவின் புகைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாகவே இருந்தது. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இருபடங்களுக்கு பிறகு பல ஆண்டு இடைவெளியில் கௌதம் வாசுதேவ் மேனன் சிம்பு கூட்டணி இணைந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...  விமர்சனங்களால் எழுச்சி பெரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு...ட்வீட்டர் ரிவ்யூக்கள் என்ன சொல்கிறது ?

மேலும் சிறப்பாக எழுத்தாளர் ஜெயமோகன் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் முதல் முறையாக கைகோர்த்துள்ளார். இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடித்தெரு, 2.0, பாபநாசம், சர்க்கார், இந்தியன் 2, பொன்னியின் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர். அதேபோல கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தரா மேனனும் பணிபுரிந்துள்ளனர்.  ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் பிரம்மாண்ட  விழாவின் மூலம் வெளியிடப்பட்டது. அந்த விழாவிற்கு சிம்பு ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டி இருந்தார். இந்த ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் படத்தை பார்க்க மிகுந்த ஆர்வத்தில் காத்திருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...10 ஆண்டுகளை நிறைவு செய்த..சசிகுமார் - லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான சுந்தர பாண்டியன்!

அவர்களுக்கு தீனி போடும் வகையில் இன்று திரையரங்குகளுக்கு வந்துள்ளது வெந்து தணிந்தது காடு. ஐசரி  கணேஷ் தயாரித்துள்ள இந்த படம் முத்து என்கிற கதாநாயகனை சுற்றியே நகரும் கதைக்களத்தை கொண்டுள்ளது. நெல்லையிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளராக மும்பைக்கு செல்லும் முத்து அங்கு கேங்ஸ்டார்களிடம் மாட்டிக் கொண்டு அவர் சந்திக்கும் பிரச்சினைகளும் பின்னர் அனைத்தையும் எதிர்கொண்டு தானும் கேங்ஸ்டர் ஆக மாறும் கதைக்களத்தை முழுமையாக கொண்டுள்ளது இந்த படம்.

ஏற்கனவே சிம்பு தெரிவித்தபடி இதன் இடைவேளை மற்றும் இறுதி காட்சிகள் மாஸாக இருப்பதாகவும், படம் விறுவிறுப்பான கதைகளத்தை கொண்டுள்ளதாகவும் விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் தனி மனிதனின் வாழ்க்கை கதையை சுற்றி கதை நகர்வதால் அதனுடன் ஒன்றிப்போவது கொஞ்சம் கஷ்டமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. செகண்ட் ஹாப் பக்காவான பேக்கேஜாக உருவாகியுள்ளதாகவும் ஆனாலும் சிம்புவின் வழக்கமான மாஸ் பஞ்ச் டயலாக் எல்லாம் இந்த படத்தில் கிடையாது என்றும் ரசிகர்கள் ஏக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: சால்ட் அண்ட் பெப்பர் தாடியில்.. செம்ம ஸ்டைலிஷாக கோட் சூட்டில் போஸ் கொடுத்த சிம்பு! இணையத்தை கலக்கும் போட்டோஸ்!

click me!