வெந்து தணிந்தது காடு படத்தில் இரண்டாவது சிங்கிள் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த பாடலை ஏ.ஆர் ரஹமான் இசையமைத்து பாடியுள்ள இதற்கு தாமரை வரிகள் இயற்றியுள்ளார்.
கௌதம் வாசு மேனன் சிம்பு கூட்டணியில் தற்போது சிலம்பரசன் சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் முக்கிய வேடங்களில் நடிக்க வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இதன் விநியோகத்திற்கான உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.
வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. முதல் சிங்கள் கடந்த மே 6-ம் தேதி வெளியானது. காலத்துக்கும் நீ வேணும் என்ற தலைப்புடன் வெளியான இந்த பாடலை சிம்பு பாடியிருந்தார். அதோடு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது. ஒரு வருடம் கழித்து இதன் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...தோல்வியை கண்டு துவண்டு போகாத லெஜண்ட்...அடுத்த படப்பிடிப்புக்கு ரெடியாகிட்டாராம் ?
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி அன்று இந்த படத்தின் டீசர் வெளியானது. கிராமப்புற பின்னணியிலிருந்து வந்த இந்த இளைஞனின் கதையை விவரிக்கும் கதை களத்தை இந்த படம் கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் இரண்டாவது சிங்கிள் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த பாடலை ஏ.ஆர் ரஹமான் இசையமைத்து பாடியுள்ள இதற்கு தாமரை வரிகள் இயற்றியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...விருமன் வெற்றியில் ஒரு பங்கை நடிகர் சங்கத்திற்கு கொடுத்த சூர்யா! எவ்வளவு தெரியுமா?
மேலும் செய்திகளுக்கு... "கதாநாயகிகள் போஸ்டரில் இடம் பெறுவதே பெரிய விஷயம்"..ஆதங்கத்தை கொட்டிய தமன்னா
முன்னதாக சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியிருந்த மாநாடு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இயக்குனர் - நடிகர் என இருவருக்கும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றியை பல நாட்கள் பட குழு கொண்டாடி வந்தன.