தந்தையின் முத்தத்திற்கு அர்த்தம் சொன்ன கவிஞன்...நா. முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று

By Kanmani PFirst Published Aug 14, 2022, 1:50 PM IST
Highlights

நா முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று. ஆறு வருடங்கள் கடந்து விட்ட போதிலும் நா.முத்துக்குமார் அவரது எழுத்துக்களால் இன்றும் திரையுலகில் சுவாசம் செய்து வருகிறார். இந்நாளில் அவரது பாடல்களை நாம் நினைவு கூறுவோம்.

இயக்குனராக வேண்டும் என்கிற கனவுடன் திரை உலகிற்கு வந்தார் நா முத்துக்குமார். ஆனால் இவருடைய தமிழ் ஆர்வம் முத்துக்குமாரை கவிஞராக மாற்றியது. வீரநடை படம் மூலம் பாடலாசிரியராக தன் பயணத்தை துவங்கினார் முத்துக்குமார். ஒரு தலைமுறைக்கு மேலாக நீடித்த இவரது திரைப்பயணத்தில்  சுமார் 1000 பாடல்களை எழுதியுள்ளார்.  2012ல் மட்டும் 103 பாடல்களை எழுதி சிறந்த சாதியை படைத்திருந்தார்.

 யுவன் சங்கர் ராஜா மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர் . இந்த கூட்டணியில்  200க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியதாக கூறப்படுகிறது.  முன்னதாக தேசிய விருது பெற்ற தமிழ்த் திரைப்படமான வெயில் படத்தில் இருந்து முத்துக்குமாரின் வெயிலோடு விளையாடு பாடலுடன் தனது இசை வாழ்க்கை தொடங்கியதாக பிரபல இசை அமைப்பாளர் ஜிவி  பிரகாஷ் கூறியிருந்தார். அவரது இரண்டு பாடல்கள் ஆனந்த யாழை மீட்டுகிறாய் மற்றும் அழகே அழகே ஆகிய பாடல்களுக்காக தேசிய விருது கிடைத்தது.

மேலும் செய்திகளுக்கு...இளம் பெண்ணுடன் காருக்குள் கசமுசா... போலீசிடம் வசமாக சிக்கிய சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா

அதோடு சுற்றும் விழி சுடரே, தேவதையை கண்டேன், முன்னந்தி மற்றும் வெண்ணிலவே உள்ளிட்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம்.  நல்ல வெற்றிகளை குவித்து வந்த கவிஞருக்கு திடீர் சோதனை ஏற்பட்டது. அவர் தனது 41 வது வயதில் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் காமாலை முற்றியதன் காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு நீங்கினார்.

நா முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று. ஆறு வருடங்கள் கடந்து விட்ட போதிலும் நா.முத்துக்குமார் அவரது எழுத்துக்களால் இன்றும் திரையுலகில் சுவாசம் செய்து வருகிறார். இந்நாளில் அவரது பாடல்களை நாம் நினைவு கூறுவோம்.

யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடலில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல்  தந்தை மகளின் அன்பை அழாகாக சொன்னது.

மேலும் செய்திகளுக்கு... அர்ஜுன் மகளா இது..! பளீச் என தொடை தெரிய போஸ் கொடுத்து இளசுகளை இம்சிக்கும் ஐஸ்வர்யா - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

 

சைவத்தின்படத்திலிருந்து அழகே அழகே பாடல் வெகுவாக கவர்ந்திருந்தது.  . நா முத்துக்குமார் எழுதிய இந்த பாடலை உன்னிகிருஷ்ணனின் மகள் 8 வயது உத்ரா பாடியிருந்தார்.

 

மேலும் செய்திகளுக்கு... மருதநாயகம் படத்துக்காக பேசிய டயலாக்கை முதல்முறையாக வெளியிட்டு... கமல் சொன்ன வித்தியாசமான சுதந்திர தின வாழ்த்து

வெயில் படத்திலிருந்து வெயிலோடு விளையாடி பாடல் வரிகளை நா. முத்துக்குமார் இயற்ற அழகான இசையை கொடுத்திருந்தார் ஜிவி பிரகாஷ். இந்த படத்தை சரத் மேனன் இயக்கி இருந்தார்.

 

கஜினியில் இருந்து சுட்டும் விழி.  சூர்யா, அசின், நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.  ஏ.ஆர்.முருகதாஸ்  இயக்கிய இந்த படத்தின் வெற்றி பாடலுக்கு  நா. முத்துக்குமார் வரிகள் இயற்றி இருந்தார்.

 

click me!