”பியார் பிரேமா காதலுக்கு“நான் சரிபட்டு வரமாட்டேன்; சிம்பு தான் பெஸ்ட்; சொன்னது யார் தெரியுமா?

First Published Aug 1, 2018, 4:44 PM IST
Highlights
simbu is the best says famous actor


மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தன்னுடைய யதார்த்தமான நடிப்பாலும் கடின உழைப்பாலும் தமிழ் திரையுலகில் தனக்கு என ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடித்து தயாரித்த ஜுங்கா திரைப்படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. படத்தின் முதல் பாதி நன்றாக இருந்தாலும் சில பல காரணங்களால் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை இந்த திரைப்படம்.

இந்த கதை ஒரு பக்கம் இருந்தாலும் கைவசம் நிறைய வாய்ப்புகளுடன் எப்போதும் பிஸியாக இருந்துவருகிறார் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். யுவன் தயாரிப்பில் பிக் பாஸ் புகழ் ரைசா மற்றும் ஹரீஷ் கல்யாண் நடித்த ”பியார் பிரேமா காதல்” திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா தான் அது.

அந்த நிகழ்வின் போது விஜய் சேதுபதியிடம் ஒரு பெண்ணிடம் பிரபோஸ் செய்து காட்டுமாறு கேட்டிருக்கிறார் நிகழ்ச்சி தொகுப்பாளர். அதற்கு விஜய் சேதுபதி இதுக்கெல்லாம் நான் சரிபட்டு வரமாட்டேன். என் தலைவன் சிம்பு தான் சரியான ஆள் அவர கேளுங்க, என கூறி சிம்புவை கைகாட்டி இருக்கிறார். அதுவும் சரி தானே!

click me!