நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம்... நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல்... குஷியில் ரசிகர்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 04, 2020, 05:14 PM IST
நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம்... நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல்... குஷியில் ரசிகர்கள்...!

சுருக்கம்

இந்நிலையில் சிம்புவுக்கு நெருக்கமான நண்பரும், நடிகருமான விடிவி கணேஷ் ஆன்லைன் தளத்தில் கொடுத்துள்ள பேட்டி, எஸ்.டி.ஆரின் கல்யாணம் குறித்த மர்மத்திற்கு விடை கொடுத்துள்ளது. 

காதலில் சொதப்புவது எப்படி என கிளாஸ் எடுக்கும் அளவிற்கு பிரச்சனைகளை சந்தித்துவிட்டார் சிம்பு. “வல்லவன்” படத்தில் நடித்த போது நயன்தாராவுடன் சிம்புவுக்கு காதல் மலர்ந்தது. ஜோடி பொருத்தம் சூப்பர் என ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருந்த போது, யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை பெரும் புயலாக பிரச்சனை ஒன்று வந்து சேர்ந்தது. சிம்புவும், நயனும் தனி அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லீக்கானது. போட்டோஸை வெளியிட்டதே சிம்பு தான் என வதந்திகள் கிளம்பின. இதனால் கடுப்பான நயன்தாரா சிம்புவை கழட்டிவிட்டார். 

இதையும் படிங்க: அஜித்தை விட நயன்தாரா ஸ்டார் வேல்யூ வேற லெவல்...லேடி சூப்பர் ஸ்டாரை ‘தல’ மேல் வைத்து கொண்டாடும் பிரபல நடிகர்!

அதன் பின்னர் நம்ம குட்டி குஷ்பு ஹன்சிகா மோத்வானியுடன் காதலில் விழுந்தார். வாலு படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் துளிர்விட்டது. நயன் விவகாரத்தில் நடந்தது போலவே சிம்புவும், ஹன்சிகாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. இதனால் அடுத்தடுத்து பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து, முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ஹன்சிகாவும் தனது கேரியருக்காக காதலை கழட்டிவிட்டார். இப்படி ஒருமுறை அல்ல, இரண்டு முறை காதல் தோல்விகளை கண்டார் சிம்பு. 

இதையும் படிங்க: நடிகர் ஆர்யா மனைவி சாயிஷா கர்ப்பம்?... கோலிவுட்டில் தீயாய் பரவும் செய்தி...!

கால்ஷீட் சொதப்பலால் பட வாய்ப்புகளும் கழுவி நழுவி போக பையனுக்கு கல்யாணமாவது செய்து வைக்கலாம் என பெற்றோர் பெண் தேடி அலைய ஆரம்பித்தனர். அப்போது உறவுக்கார பெண் ஒருவரை சிம்பு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அப்போது அந்த தகவலை மறுத்த சிம்பு, எனக்கு திருமணம் என்றால் நானே முறையாக அறிவிப்பேன் என்று திட்டவட்டமாக கூறினார். 

இதையும் படிங்க: “போன மாச கரண்ட் பில்லை கட்டிட்டு பேசுப்பா”...நடிகர் பிரசன்னாவிற்கு மின்வாரியம் கண்டனம்...!

இந்நிலையில் சிம்புவுக்கு நெருக்கமான நண்பரும், நடிகருமான விடிவி கணேஷ் ஆன்லைன் தளத்தில் கொடுத்துள்ள பேட்டி, எஸ்.டி.ஆரின் கல்யாணம் குறித்த மர்மத்திற்கு விடை கொடுத்துள்ளது. அந்த பேட்டியில், சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார். சொன்னது சிம்புவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் விடிவி கணேஷ் என்பதால் எஸ்.டி.ஆர். ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர். தம்பி, தங்கைக்கு எல்லாம் திருமணம் நடந்துவிட்டதால், எப்படியாவது சிம்புவிற்கு கல்யாணத்தை நடத்திவிட வேண்டுமென டி.ராஜேந்தர் நினைத்து வருகிறார். அதனால் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!