தற்போது வரை பிரசன்னா முன்பு நிர்ணயிக்கப்பட்ட 13 ஆயிரத்து 528 ரூபாயை தற்போது வரை செலுத்தவில்லை. அதனால் தான் மொத்த கட்டணம் 42 ஆயிரத்து 632 ரூபாயாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா பிரச்சனையில் இருந்து மக்களை காப்பதற்காக ஐந்தாம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதித்துள்ளது. இதனால் ஏராளமானோர் வீடுகளிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் பிரசன்னா கொரோனா ஊரடங்கு காலத்தில் மின் கட்டணமாக 70 ஆயிரம் ரூபாய் வந்துள்ளதை கடுமையாக விமர்சித்தார். கொரோனா லாக்டவுன் நேரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையடிப்பதாக எத்தனை பேர் நினைக்கிறீர்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க:
இதுகுறித்து பேட்டியளித்த பிரசன்னா, என் வீட்டில் மின் கட்டணம் 70 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. என் தந்தை மற்றும் எனது மாமனார் வீடுகளுக்கான இந்த கட்டணம் ஐனவரி மாதத்தை விடவும் அதிகமாக உள்ளது. என்னால் இந்த தொகையை கட்ட முடியும், ஆனால் சாதாரண மக்களால் முடியாது என்று தெரிவித்தார். பிரசன்னாவின் இந்த ட்வீட்டிற்கு ஆதரவாக பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கருத்து தெரிவித்தனர். பலரும் தங்களது வீட்டின் மற்ற கால மின் கட்டணத்தையும், லாக்டவுன் காலத்து மின் கட்டணம் உயர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டி புகைப்படங்களை பகிர்ந்தனர்.
How many of you feel is on a looting spree amidst this COVID lockdown?
— Prasanna (@Prasanna_actor)இதையும் படிங்க:
இந்த மின் கட்டண விவகாரம் சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியை அடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் பிரசன்னா ஊரடங்கு காலகட்டம் நிறைவடைந்த பின்பு மின் கணக்கெடுப்பு என்ற முறையில் கொள்ளை அடிப்பதாகத் தவறான செய்தியை வெளியிட்டுள்ளார். இந்த கணக்கெடுப்பு முறையானது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி நடைமுறைப்படுத்தப்படுவதால் நடிகர் பிரசன்னா தமிழ்நாடு மின்சார வாரியத்தை கடும் சொற்களால் குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கதாகும்.
இதையும் படிங்க:
பிரசன்னா வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. நான்கு மாதத்தில் 6920 யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை இரண்டாக பிரிந்து முதல் இரண்டு மாதத்திற்கு 3460 யூனிட்டுக்கு 21 ஆயிரத்து 316 ரூபாயாகவும், அடுத்த 3460 யூனிட்டுக்கு 21 ஆயிரத்து 316 ரூபாயாகவும் மொத்தம் 42 ஆயிரத்து 632 ரூபாய் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பிரசன்னா முன்பு நிர்ணயிக்கப்பட்ட 13 ஆயிரத்து 528 ரூபாயை தற்போது வரை செலுத்தவில்லை. அதனால் தான் மொத்த கட்டணம் 42 ஆயிரத்து 632 ரூபாயாக விதிக்கப்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொள்ளாமல், முந்தைய மாத யூனிட்டை கழிக்காமல் தொகையை மட்டுமே கழிக்கப்படுகிறது என்ற செய்தி தவறானதாகும். பொதுமக்கள் தங்களது கணக்கீட்டு முறையில் சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை அணுகி தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.