
சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் இந்த கொடூர வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
இதை தொடர்ந்து, யூனியன் பிரதேசமான புதுவையிலும் மெல்ல மெல்ல வேகம் எடுத்துள்ளது கொரோனா வைரஸ். சென்னையில் இருந்து, புதுவைக்கு வந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே, கொரோனாவால் புதுவையில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதுவரை மொத்தம் 99 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு. பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் கூடுதல் எச்சரிக்கையோடு செயல்பட்டு வரும் புதுவை அரசு, கொரோனா பாதிக்கப்பட்ட நபர்... குடும்பத்தினர் மற்றும் அவர் சார்ந்த அனைவரையும் தனிமை படுத்தி, கொரோனா பரிசோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இருந்து, புதுவைக்குள் காரணம் இன்றி யாரையும் அனுமதிக்கவும் மறுக்கின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள புதுவை சுகாதார துறை இயக்குனர், இதே நிலை நீடித்தால்... புதுவை கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக மாற்றுவது தான் ஒரே வழி, என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.