பொண்டாட்டி என்ன வேலைக்காரியா..? விடிவி கணேஷை வறுத்தெடுத்த சிம்பு..! ஃபேன்ஸ் செம்ம ஹாப்பி!

By manimegalai a  |  First Published May 14, 2020, 8:17 PM IST

நடிகர் சிம்பு, ஒரு பக்கம் பிரியாணி செய்து கொண்டே... காமெடி நடிகரும் அவருடைய நண்பருமான விடிவி கணேஷை லெப்ட்  - ரைட் வாங்கியுள்ள வீடியோ சிம்புவின் ரசிகர்களை, குறிப்பாக பெண் ரசிகர்களை செம்ம ஹாப்பி ஆக்கி உள்ளது. 


நடிகர் சிம்பு, ஒரு பக்கம் பிரியாணி செய்து கொண்டே... காமெடி நடிகரும் அவருடைய நண்பருமான விடிவி கணேஷை லெப்ட்  - ரைட் வாங்கியுள்ள வீடியோ சிம்புவின் ரசிகர்களை, குறிப்பாக பெண் ரசிகர்களை செம்ம ஹாப்பி ஆக்கி உள்ளது. 

தமிழ் சினிமாவில், தனக்கென தனி ஸ்டைல், தனி நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. அதிலும் இவருக்கு பெண் ரசிகர்கள் மற்ற நடிகர்களை விட கொஞ்சம் அதிகம் என்றே கூறலாம்.

Tap to resize

Latest Videos

undefined

சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி தன்னுடைய மனதில் பட்ட கருத்தை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையாக கூறும் நடிகர்களில் இவரும் ஒருவர். தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும், படப்பிடிப்புகளில் பிஸியாக  இருந்த இவர், கொரோனாவால் போடப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக வீட்டிலேயே உள்ளார்.

மேலும் செய்திகள்: வதந்தி பரப்பியவர்களுக்கு நன்றி... தனிமை படுத்தப்பட்ட விவகாரம்! ராதாரவி கொடுத்த விளக்கம்!
 

இதுநாள் இவரை இவரை பற்றிய எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், சிம்பு பேசிய பேச்சுக்கு ரசிகர்கள் சும்மா தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

அப்படி என்ன பேசியுள்ளார் என யோசிக்கிறீர்களா....?

மேலும் செய்திகள்: சோகம் நீங்குவதற்குள் வந்த பிறந்தநாள்..! கண்ணீரோடு ரோபோ ஷங்கர் மகள் போட்ட நெஞ்சை உருக வைக்கும் பதிவு!
 

பிரியாணி செய்து கொண்டிருக்கும் சிம்புவிடம் அவருடைய நண்பர் விடிவி கணேஷ் நீங்க சமைப்பதை பார்த்தால் , ‘வருங்கால மனைவிக்கு வீட்டில் வேலையே இருக்காது போல் தெரிகிறது’ என்று கூறுகிறார். உடனே சிம்புவுக்கு வந்தது கோவம்.  ‘வீட்டில் வேலை செய்வதற்கா ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறோமா... அவள் என்ன வேலைக்காரியா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு சும்மா வறுத்தெடுத்தார். பின் மனைவி என்பவர் துணைவி என்றும் அவரை மதிக்க கற்று கொள்ள வேண்டும் என்று சிம்பு கூறினார்.

மேலும் என் பொண்டாட்டிய நான் எப்படி வேணும்னாலும் வாசிப்பேன் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கிறார். இவரின் இந்த வார்த்தையை கேட்டு, நெட்டிசன்கள் பலர் சிம்புவுக்கு வர போகும் மனைவி மிகவும் கொடுத்து வைத்தவர் என தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு... தன்னை தானே ஏலியன் என கலாய்த்து கொண்ட பிக்பாஸ் நாயகி ரைசா!
 

தற்போது வெளியாகியுள்ள அந்த வீடியோ இதோ...

pic.twitter.com/MYJoeppdD1

— meenakshisundaram (@meenakshicinema)

 

click me!